- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
கொள்ளு துவையல் ரெசிபி ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானது. உடல் எடையை குறைக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க கொள்ளு பருப்பு வச்சு அடிக்கடி ஏதாவது ஒரு ரெசிபி செஞ்சு சாப்பிடணும். கொள்ளு பருப்பு வச்சு கஞ்சி கொள்ளு கடையில் கொள்ளு பருப்பு தாளிச்சது, கொள்ளு துவையல் இந்த மாதிரி ஏதாவது ஒன்னு செஞ்சு சாப்பிட்டுகிட்டே இருக்கணும். ஜிம்முக்கு போய் உடம்ப குறைக்கிறதை விட இந்த மாதிரி ஆரோக்கியமான சில உணவுகளை செஞ்சு சாப்பிட்டேன் நம்ம உடலை குறைக்கலாம். இது ஒரு அனுபவபூர்வமான உண்மை அப்படினு சொல்லலாம் அது மட்டும் இல்லாம கொள்ளு வெச்சு ரசம் வைத்து சாப்பிட்டால் சளி இருமல் பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
அதனால அடிக்கடி கொள்ளு பருப்பை உணவில் சேர்த்துக்கோங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். சுவையான இந்த கொள்ளு பருப்பு ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடணும். குழந்தைகளுக்கும் சின்ன வயசுல இருந்தே கொடுக்கணும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு பழகுவாங்க. இந்த கொள்ளு துவையல் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் சுட சுட சாதத்துல போட்டு பிசைந்து சாப்பிட ரொம்ப டேஸ்டா இருக்கும். அது மட்டும் இல்லாம வேற ஏதாவது ரசம் சாதம் சாம்பார் சாதம் கலவை சாதம் தயிர் சாதம் லெமன் சாதம் செய்யும் போது இந்த கொள்ளு துவையல் செய்து அதை சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.
ரொம்பவே அருமையா இருக்கும். இந்த சுவையான கொள்ளு துவையல் ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. கொள்ளு பருப்பை ஃபர்ஸ்ட் நல்லா சிவக்க வறுத்து அது கூட தேங்காய் துருவல் கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு எல்லாம் சேர்த்து வறுத்து அரைச்சு செய்யும் போது அவ்ளோ மணமா இருக்கும். இதோட வாசனையே பக்கத்து வீட்டுக்கும் மணக்கும். இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான உடல் எடையை சட்டுனு குறைக்கக்கூடிய கொள்ளு பருப்பு வச்சு ஒரு சூப்பரான துவையல் எப்படி செய்றதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : கொள்ளு சட்னி செயவது எப்படி ?
Ingredients
Method
கடாயில் கொள்ளு பருப்பை சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு தேங்காய் துருவல் புளி பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி ஆறவைத்து அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து சேர்த்து விட்டால் சுவையான கொள்ளு துவையல் தயார்.






