- Prep
- 5 min
- Cook
- 20 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பார்த்து பார்த்து சத்தாக சமைத்து கொடுப்பீர்களா? அவர்களின் ஆரோக்கியத்திற்காக கொண்டைக்கடலையை அடிக்கடி உணவில் சேர்ப்பீர்களா? ஆனால் என்ன தான் கொண்டைக்கடலையை வேக வைத்தோ அல்லது வேறு எப்படி செய்தாலும் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு கொண்டைக்கடலை கொண்டு பிரியாணி செய்து கொடுங்கள். இதுவரை கொண்டைக்கடலை வைத்து குழம்பு தான் செய்வதை கேள்விபட்டிருப்போம்.
ஆனால் கொண்டைக்கடலை கொண்டு பிரியாணி செய்யலாம் என்று கேள்விப்பட்டதுண்டா? ஆம், கொண்டைக்கடலைக் கொண்டு அருமையான சுவையில் பிரியாணி செய்யலாம். இந்த கொண்டைக்கடலை பிரியாணி நிச்சயம் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும் என்பதால் இப்படியான பிரியாணி ரெசிபிக்களை தெரிந்து வைத்துக் கொண்டால், அவ்வப்போது வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்து, அவர்களை அசத்தலாம்.
கொண்டைக்கடலையில் புரதசத்து, நார்சத்து, மாவுச்சத்து போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் இந்த பிரியாணி இதய நோயாளிகளுக்கு ஏற்ற மிகவும் சிறப்பான உணவு. எனவே இந்த வாரம் அசைவ பிரியாணி செய்ய முயற்சிப்பதற்கு பதிலாக, கொண்டைக்கடலை கொண்டு பிரியாணியை முயற்சி செய்யுங்கள். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கொண்டைக்கடலை பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் :
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் கொண்டைக்கடலையை வேகவைத்து, அதனை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் பிரியாணி இலை, சோம்பு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா வாசனை போனதும் தயிர் சேர்த்து வதக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கொண்டைக்கடலை பிரியாணி தயார்.






