- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மதியம் உணவிற்கு என்ன குழம்பு செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு குழம்பு செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியைக் கொண்டு கொத்தமல்லி குழம்பு செய்யுங்கள். இதுவரை நீங்கள் கொத்தமல்லியை வெச்சு சட்னி தான் செய்திருப்பீர்கள்.
ஆனால் அடுத்தமுறை அந்த கொத்தமல்லியை வைத்து குழம்பு செய்யுங்கள். இந்த கொத்தமல்லி குழம்பு சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது ஒரு சத்தான குழம்பு. குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். மதிய வேளையில் எப்போதும் ஒரே மாதிரி காய்கறிகளைப் போட்டு சாம்பார், குழம்பு செய்து போரடித்து விட்டால் சற்று வித்தியாசமான, அதே சமயம் சத்தான இந்த கொத்தமல்லி குழம்பு செய்து பாருங்கள்.
இந்த கொத்தமல்லி குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, சப்பாத்தி, தோசையுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கிமாக இதை பக்குவமாக ஒரு முறை இதை செய்தால் இந்த குழம்பை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இப்போது சுவையான கொத்தமல்லி குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் :கொத்தமல்லி உருளைக்கிழங்கு மசாலா
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துவரம் பருப்பு, மிளகு, தனியா, வெள்ளை எள், காய்ந்த மிளகாய், தேங்காய், கொத்தமல்லி, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் அவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை, நாம் அரைத்து வைத்துள்ள விழுது, பெருங்காயத்தூள், புளி தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறிதளவு வெல்லம் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி குழம்பு தயார்.






