Advertisement
சைவம்

மதிய உணவாக செய்ய ஏற்ற சுவையான கொத்தமல்லி புலாவ் எப்படி செய்வது ?

Advertisement

குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்ற அட்டகாசமான மதிய உணவு ரெசிபி இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் கேப்பார்கள் ஏனென்றால் இந்த கொத்தமல்லி புலாவ் அந்தளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இதையும் படியுங்கள் : மணமணக்கும் சுவையான வெங்காய சாதம் செய்வது எப்படி ?

Advertisement

அதனால் இன்று வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த கொத்தமல்லி புலாவ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கொத்தமல்லி புலாவ் | Kothamalli Pulao Recipe In Tamil

Print Recipe
குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்ற அட்டகாசமான மதிய உணவு ரெசிபி இது போன்று ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் கேப்பார்கள் ஏனென்றால் இந்த கொத்தமல்லி புலாவ் அந்தளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த கொத்தமல்லி புலாவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kothamallithalai pulao, கொத்தமல்லித்தழை புலாவ்
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 0.9

Equipment

  • 1 குக்கர்

Ingredients

  • 1 கப் கொத்தமல்லித்தழை
  • 2 கப் பாசுமதி அரிசி
  • ½ கப் தேங்காய் பால்
  • 1 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 2 பெரிய வெங்காயம்
  • இஞ்சி சிறிய துண்டு
  • 4 பல் பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 தலா லவங்கம், ஏலக்காய்
  • பட்டை ஒரு துண்டு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் கொத்தமல்லித்தழையை நன்கு கழுவிக் கொள்ளவும்.
  • அடுத்து பெரியவெங்காயத்தை நீளமாக மெல்லியதாக நறுக்கவும்.
  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லிதழை ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு குக்கரில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய், சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்னர், அரைத்த கொத்தமல்லி விழுது, தயிர், எலுமிச்சை சாறு, தேங்காய் பால், ஆகியவற்றை சேர்த்துக் கிளறி, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • நன்றாக கொதித்ததும், கழுவிய அரிசியை சேர்த்துக் கிளறி குக்கரை மூடவும்.
  • ஆவி வந்ததும், வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். இப்பொழுது சுவையான கொத்தமல்லிதழை புலாவ் தயார்.

Nutrition

Calories: 0.9kcal | Vitamin A: 13.5IU | Vitamin C: 6mg | Iron: 1mg
Advertisement
swetha

Recent Posts

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் ஏற்பட போகும் சில ராசிகள்!

பொதுவாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்சியாலும் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களை கேட்பார்கள் அந்த வகையில் ஜோதிடத்தின்படி மே 12ஆம் தேதி என்று…

12 நிமிடங்கள் ago

இட்லி தோசைக்கு இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க

பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 12 மே 2024!

மேஷம் இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை…

4 மணி நேரங்கள் ago

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

13 மணி நேரங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

17 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

17 மணி நேரங்கள் ago