நமது பாரம்பரிய சைடிஷா கொத்தவரங்காய் வற்றல் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா ? இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

நாம் ரசம், மோர் குழம்பு போன்றவற்றுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற கொத்தவரங்காய் வற்றல் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கொத்தவரங்காய் வற்றலை வைத்து வத்தல் குழம்பு செய்யும் பொது சேர்த்து கொள்ளலாம் அல்லது சாப்பிடும் போது சைடிஷ் இல்லை என்றால் சிறிது எண்ணெயில் பொரித்து சத்தத்துடன் தொட்டுக்கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கொத்தவரங்காய் வற்றல் எப்படி செய்வது, தேவையான பெ்ருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-
Print
No ratings yet

கொத்தவரங்காய் வற்றல் | Kothavaragai Vathal Recipe In Tamil

நாம் ரசம், மோர் குழம்பு போன்றவற்றுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற கொத்தவரங்காய் வற்றல் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கொத்தவரங்காய் வற்றலை வைத்து வத்தல் குழம்பு செய்யும் பொது சேர்த்து கொள்ளலாம் அல்லது சாப்பிடும் போது சைடிஷ் இல்லை என்றால் சிறிது எண்ணெயில் பொரித்து சத்தத்துடன் தொட்டுக்கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: vathal, வற்றல்
Yield: 5 people

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • ¼ கிலோ கொத்தவரங்காய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

செய்முறை

  • முதலில் கொத்தவராகயின் இரு ஓரங்களையும் நீக்கவும்.
  • பிறகு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
  • கொத்தவரங்காய் நன்கு வெந்ததும், இறக்கி வடிகட்டவும்.
  • இதை வெயிலில் நன்கு காயவிடவும். (முறுகலாக உடையும் பதம் வரை காயவிடவும்)
  • பிறகு காற்றுபுகாத டப்பாவில் சேகரிக்கவும். இதை வற்றல் குழம்பு செய்யும் போது சேர்க்கலாம்.
  • அல்லது, தனியாக எண்ணெயில் பொரித்து ரசம் சாதம், மோர் சாதம், சாப்பிடும் போது தொட்டுக்கொள்ளலாம்.

Nutrition

Carbohydrates: 11g | Protein: 3g | Fiber: 3g | Calcium: 130mg | Iron: 1mg
- Advertisement -

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here