Advertisement
சைவம்

ருசியான கொத்தவரங்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க! சில குழம்பை மட்டும் அடிக்கடி செய்யாமல் இதை செய்து பாருங்க!

Advertisement

கொத்தவரங்காய் பெரும்பாலும் கூட்டு செய்து சாப்பிடுவோம். கொத்தவரங்காய் சம்பாரில் சேர்ப்போம். கொத்தவரங்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் குழம்பு செய்யும்போது, கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற கொத்தவரங்காய் பொரியல் செய்வது எப்படி ?

Advertisement

ஏன் அடிக்கடி கேட்டு வாங்கி கூட சாப்பிடுவார்கள். இந்த பதிவில் கொத்தவரங்காய் மட்டும் வைத்து எப்படி சுலபமாக குழம்பு செய்வது எப்படி என்றும் , என்ன செய்முறைகள், தேவையான பொருட்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கொத்தவரங்காய் குழம்பு | Kothavarangai Kulambu Recipe In Tamil

Print Recipe
கொத்தவரங்காய் பெரும்பாலும் கூட்டு செய்து சாப்பிடுவோம். கொத்தவரங்காய் சம்பாரில் சேர்ப்போம். கொத்தவரங்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் குழம்பு செய்யும்போது, கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் அடிக்கடி கேட்டு வாங்கி கூட சாப்பிடுவார்கள். இந்த பதிவில் கொத்தவரங்காய் மட்டும் வைத்து எப்படி சுலபமாக குழம்பு செய்வது எப்படி என்றும் , என்ன செய்முறைகள், தேவையான பொருட்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kothavarangai, கொத்தவரங்காய்
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 4 People
Calories 33

Equipment

  • 1 மிக்ஸி ஜார்
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுல்

Ingredients

  • 2 கப் கொத்தவரங்காய் நறுக்கியது
  • 1/2 tsp பெருங்காயம்
  • 1/2 tsp மஞ்சள் தூள்
  • 2 tsp எண்ணெய்
  • 1/2 tsp கடுகு
  • 1/2 tsp சீரகம்
  • 1/2 tsp வெந்தயம்
  • 1/2 tsp பெருங்காயம்
  • 2 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 10 பல் பூண்டு
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • 2 தக்காளி நறுக்கியது
  • 1/2 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp தனியா தூள்
  • புளி எலுமிச்சை அளவு

அரைத்து எடுக்க வேண்டியது

  • 1/4 கப் தேங்காய்
  • 5 பல் பூண்டு
  • 1 tsp சீரகம்
  • தண்ணீர் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கடாயில்
    Advertisement
    தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். அதில் நறுக்கி வைத்த கொத்தவரங்காய் சேர்த்து, அதோடு பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து நன்றாக கொத்தவரங்காயை வேகவைக்கவும்.
  • கடாயில் என்னை சேர்த்து, என்னை சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கூடவே நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்னர் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும், தக்காளி நன்கு வதங்கியதும் அதோடு வேகவைத்த கொத்தவரங்காயை சேர்க்கவும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு வதக்கி விட்டு அதோடு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  • கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்த உடன், அரைத்து வைத்த தேங்காய் கரைசலை சேர்த்து, அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்துநன்கு கொதிக்க விடவும். சுவையான கொத்தவரங்காய் குழம்பு தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 33kcal | Carbohydrates: 5.87g | Protein: 3.05g | Fat: 0.26g
Advertisement
Prem Kumar

Recent Posts

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

2 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

2 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

2 மணி நேரங்கள் ago

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

5 மணி நேரங்கள் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

5 மணி நேரங்கள் ago

காலை உணவாக இந்த மென்மையான மலபார் முட்டை பரோட்டா செய்து பாருங்கள் சுவை மிகவும் அபாரமாக இருக்கும்!!

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில்…

7 மணி நேரங்கள் ago