- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் கோவைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கோவைக்காயைக் கொண்டு கோவைக்காய் பூண்டு கறி செய்யுங்கள். இதுவரை கோவைக்காய் வைத்து வறுவல், கிரேவி, தொக்கு என அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருப்போம். ஆனால் இன்று நாம் செய்யப்போகிற இந்த கோவைக்காய் ரெசிபியை ஒரே ஒரு தடவை செய்து பார்த்து விட்டால், போதும் இந்த ரெசிபிக்கு நீங்கள் அடிக்ட் ஆகிடுவீர்கள் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான கோவைக்காய் பூண்டு கறி பாக்க போறோம்.
பெரும்பாலும் கோவக்காய் ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனால் இந்த பதிவில் கூறியுள்ள செய்முறையை பின்பற்றி முறை செய்து பாருங்கள் கண்டிப்பாக கோவக்காய் விரும்பி சாப்பிடுவார்கள். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் எண்ணெயிலேயே நல்லா இந்த மாதிரி செய்து பாருங்கள் சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். இந்த கோவைக்காய் பூண்டு கறி தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் என எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். இப்போது சுவையான கோவைக்காய் பூண்டு கறி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : நாவை சுண்டி இழுக்கும் கோவைக்காய் சட்னி செய்வது எப்படி?
Ingredients
Method
முதலில் கோவைக்காயை தண்ணீரில் அலசி விட்டு வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், தேங்காய், பூண்டு, கறிவேப்பிலை, காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் நறுக்கிய கோவைக்காய் சேர்த்து வதக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு மூடி வைத்து நன்கு வேக விடவும். அவ்வளவுதான் சுவையான கோவைக்காய் பூண்டு கறி தயார்.






