ருசியான ஆந்திரா கோவக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் வைத்து சாப்பிட அற்புதமாக இருக்கும்!

- Advertisement -

வணக்கம் நண்பர்களே. நாம் பெரும்பாலும் வாங்கி பயன்படுத்தாத ஒரு காய் தான் இந்த கோவக்காய். கோவக்காய் பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். கோவக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : நாவை சுண்டி இழுக்கும் கோவைக்காய் சட்னி செய்வது எப்படி?

- Advertisement -

அதுவும் ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் பொரியல் சொல்லவே வேண்டாம். ஒரு தரம் இந்த முறையில் கோவக்காய் பொரியல் செய்து பாருங்கள். ரசம் மற்றும் சாம்பாருக்கு, இந்த கோவக்காய் பொரியல் வைத்து சாப்பிட்டால்ருசியாக இருக்கும். கோவக்காய் பொரியல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

Print
5 from 1 vote

ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் பொரியல் | Kovakkai Poriyal Recipe in Tamil

வணக்கம் நண்பர்களே. நாம் பெரும்பாலும் வாங்கி பயன்படுத்தாத ஒரு காய் தான் இந்த கோவக்காய். கோவக்காய் பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். கோவக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். அதுவும் ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் பொரியல் சொல்லவே வேண்டாம். ஒரு தரம் இந்த முறையில் கோவக்காய் பொரியல் செய்து பாருங்கள். ரசம் மற்றும் சாம்பாருக்கு, இந்த கோவக்காய் பொரியல் வைத்து சாப்பிட்டால்ருசியாக இருக்கும். கோவக்காய் பொரியல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
Prep Time25 minutes
Active Time25 minutes
Total Time50 minutes
Course: LUNCH
Cuisine: andhra, Indian
Keyword: Kovakkai, கோவக்காய்
Yield: 5 People
Calories: 1875kcal

Equipment

  • 1 மிக்ஸி ஜார்
  • 2 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 tsp எண்ணெய்
  • 1 tsp கடுகு
  • 1 tsp உளுந்தம் பருப்பு
  • 10 வர மிளகாய்
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • 1 கப் பூண்டு இடித்து எடுத்தது
  • 5 பச்சை மிளகாய் நறுக்கி எடுத்தது
  • 4 பெரிய வெங்காயம் நறுக்கி எடுத்தது
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 500 கிராம் கோவக்காய்
  • உப்பு தேவையான அளவு
  • 4 தக்காளி நறுக்கி எடுத்தது
  • தண்ணீர் தேவையான அளவு

அரைப்பதற்கு

  • 1/2 tsp முழு தனியா
  • 10 வரமிளகாய்
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • 1/2 கப் எள்ளு
  • 1/2 கப் வறுத்த வேர்கடலை
  • 2 tsp சீரகம்

செய்முறை

  • முதலில் கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து எண்ணெயில் பொரிய விடவும்.
  • அதோடு இடித்து வைத்த பூண்டு சேர்க்கவும், பின் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின், நறுக்கி எடுத்த கோவக்காய் சேர்க்கவும்.
  • பின் உப்பு சேர்த்து கிளறி விட்டு, அதோடு நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து, காய் வேகும் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு மூடி வைக்கவும்.
  • இப்போது மற்றொரு கடாயில், முழு தனியா, வர மிளகாய், கருவேப்பிலை, எள்ளு சேர்த்து நிறம் மாறும் வரை நன்றாக வறுக்கவும். அதோடு வறுத்த வேர்க்கடலை சேர்க்கவும்.
  • வறுத்த வேர்க்கடலை அதிகமாக சேர்த்தால் சுவையும் அதிகமாக இருக்கும், பின் சீரகம் சேர்த்து அனைத்தையும் நன்றாக வறுத்து எடுத்து கடாயை இறக்கவும்.
  • வறுத்து எடுத்ததை, கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இப்போது முடி வேக வைத்த கோவக்காய் நன்கு வெந்திருக்கும். அதில் அரைத்து வைத்த பொடியை சேர்த்து, உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்து கலந்து விட்டு, கடாயை இறக்கினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் கோவக்காய் பொரியல் தயார்.

Nutrition

Serving: 700g | Calories: 1875kcal | Carbohydrates: 5.2g | Fat: 5.2g | Cholesterol: 300mg | Sodium: 2300mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here