- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு விதமாக நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அதே போல் ஒரே விதமான காய்கறிகளை கொண்டு செய்யும் உணவு வகைகளை செய்து தராமல், சற்று வித்தியாசமாக செய்ய நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்களில் ஒன்றான கோவைக்காயை வைத்து இன்று நாம் சுவையான, சத்தான மற்றும் சுலபமாக கோவைக்காய் தொக்கு எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். பெரும்பாலும் கோவைக்காய் ஒரு சிலருக்கு சுத்தமாக பிடிக்காது.
ஆனால் இந்த பதிவில் கூறியுள்ள செய்முறையை பின்பற்றி ஒரு தடவை செய்து பாருங்கள் கண்டிப்பாக கோவைக்காய் விரும்பி சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். பச்சை காய்கறியான கோவைக்காய் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உடம்புக்கு கிடைக்கும் அதனால் அடிக்கடி இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கோவைக்காய் தொக்கு தயிர் சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம் என எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். ஒரு தடவை இந்த ரெசிபியை செய்து பாருங்கள் அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீர்கள். இப்போது சுவையான கோவைக்காய் தொக்கு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கோவக்காய் வாங்கி இப்படி ஒரு தடவை கிரேவி செஞ்சு பாருங்க சுவை அசத்தலாக இருக்கும்!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய கோவைக்காய் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய கோவைக்காய் மற்றும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களான இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தயிர், தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கோவைக்காயில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான கோவைக்காய் தொக்கு தயார்.






