- Advertisement -
வழக்கமாக காலையில் சாப்பிடும் இட்லி, தோசை வெண்பொங்கல் போன்ற டிபன் வகை உணவுகளுக்கு பதிலாக. கோவில்களில் செய்யப்படும் மிகவும் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவுகளில் மிளகு வெண்பொங்கலும் ஒன்று, வழக்கம் போல் ஒரே மாதிரியான பொங்கலை செய்யாமல்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சவையான கோவில் அன்னதான சாம்பார் சாதம் செய்வது எப்படி ?
- Advertisement -
இது போன்ற கோவில் மிளகு பொங்கல் செய்து பாருங்கள் அட்டகாசமான சுகையில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறை உங்களை இது போல் வைக்க சொல்லி கேட்பார்கள். அதனால் இன்று இந்த மிளகு வெண்பொங்கல் எப்படி செய்வது, செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நம் காணலாம் வாருங்கள்.
கோவில் மிளகு பொங்கல் | Kovil Milagu Pongal Recipe in Tamil
வழக்கமாக காலையில் சாப்பிடும் இட்லி, தோசை வெண்பொங்கல் போன்ற டிபன் வகை உணவுகளுக்கு பதிலாக. கோவில்களில் செய்யப்படும் மிகவும் அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய உணவுகளில் மிளகு வெண்பொங்கலும் ஒன்று, வழக்கம் போல் ஒரே மாதிரியான பொங்கலை செய்யாமல் இது போன்ற கோவில் மிளகு பொங்கல் செய்து பாருங்கள் அட்டகாசமான சுகையில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறை உங்களை இது போல் வைக்க சொல்லி கேட்பார்கள்.
Yield: 4 People
Calories: 120kcal
Equipment
- 1 குக்கர்
- 1 தாளிப்பு கரண்டி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 டம்பளர் பாசி பருப்பு
- 2 டம்பளர் பச்சரிசி
- 1/4 Tsp மஞ்சள் தூள்
- 1 Tsp பெருங்காய தூள்
- 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
- 1 கொத்து கருவேப்பிலை
- 2 Tsp எண்ணெய்
- 1 Tsp மிளகு
- 1 Tsp சீரகம்
- 15 முந்திரி
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சை அரிசிஎடுத்து மற்றும் பாசிப்பருப்பை எடுத்து கொள்ள வேண்டும். இதனை 2முறை நன்கு கழுவ வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்ட வேண்டும்.பின்னர் இவற்றுடன் 10 அல்லது 12 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.பிறகு இதனை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- பிறகு இஞ்சியின் மீதுள்ள தோலை நீக்கிவிட்டு, அதனை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு குக்கரை எடுத்து கொள்ளவேண்டும்.அதில் 4 டம்பளர் நீரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- பின்பு ஊறவைத்த பச்சை அரிசிஎடுத்து மற்றும் பாசிப்பருப்பை எடுத்து குக்கரில் போட வேண்டும்.பிறகு குக்கரில் அதில் பாதியளவு இஞ்சியை அரிசியுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.
- பிறகு இதனுடன் அரை டீஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
- பிறகு குக்கரை மூடி விட வேண்டும். பின்னர் குக்கரில் இருந்து பிரஷர் வர ஆரம்பித்ததும் குக்கர் விசில் போட வேண்டும்.குக்கரில் இருந்து நான்கு விசில் வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.
- பிறகு அடுப்பின் மீது ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் ,மீதமுள்ள இஞ்சி துண்டுகள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- ஒரு ஸ்பூன் பெருங்காயத் தூளை தண்ணீரில் கரைத்து, தாளிப்புடன் சேர்க்க வேண்டும்.பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் மூடியை திறந்து இந்த தாளிப்பு சேர்த்து கலந்து விட்டால் போதும்.
- பின்பு முந்திரியை நெய்யில் பொன் நிறமாக வறுத்து அதையும் பரிமாறும் முன்பு சேர்த்து கொள்ள வேண்டும். கமகம வாசத்துடன் கோவில் சுவையில் மிளகு வெண்பொங்கல் தயாராகிவிடும்.
Nutrition
Serving: 700G | Calories: 120kcal | Carbohydrates: 72g | Protein: 31g | Fat: 2.1g | Sodium: 21mg | Potassium: 492mg | Fiber: 6g | Sugar: 0.1g | Vitamin A: 3.6IU | Iron: 0.5mg