காரசாரமான வெண்டைக்காய் மசாலா இப்படி செஞ்சு பாருங்க! எல்லாவிதமான வெரைட்டி சாதத்திற்கும் சூப்பரா இருக்கும்!

- Advertisement -

எல்லாருக்கும் வெண்டைக்காய் அப்படின்ன ரொம்ப பிடிக்கும் . வெண்டைக்காய் புளிக்குழம்பு வச்சா  விரும்பி சாப்பிடாதவங்க  இருக்கவே மாட்டாங்க. எல்லாருமே ரொம்ப விரும்பி சாப்பிடுற வெண்டைக்காய் மசாலா வெங்காயம் தக்காளி சேர்க்காம ரொம்பவே சூப்பரா   பண்ண போறோம். இந்த வெண்டைக்காய் மசாலாவ பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி

-விளம்பரம்-

 செய்து கொடுத்தா நல்லாவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த வெண்டைக்காய் மசாலா பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லாருக்கும் பிடிக்கும். இப்படி சுவையான வெண்டைக்காய்  மசாலாவை செய்து சாதத்து கூட சேர்த்து வச்சு சாப்பிடும்போது அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும். மசாலாவோட டேஸ்ட் மட்டும் இல்லாம வெண்டைக்காய் ரொம்ப அற்புதமான இருக்கும். எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

இந்த மாதிரி வெண்டைக்காய் செய்து கொடுத்தீங்கன்னா கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் சுத்தமா எல்லாமே காலி ஆயிடும். அந்த அளவுக்கு ரொம்பவே ருசியா இருக்கும் இந்த வெண்டைக்காய் மசாலா. அதுவும்  வெங்காயம் தக்காளி இதெல்லாம் எதுவுமே இல்லாம சூப்பரா சிம்பிளா பண்ண போறோம்.

இந்த வெண்டைக்காய் மசாலாவை தக்காளி, வெங்காயம் இல்லாத டைம்ல வீட்ல இருக்குற மசாலா பொருட்களை யூஸ் பண்ணி ரொம்ப சூப்பரா இருந்த வெண்டைக்காய் மசாலா பண்ணிடலாம். சரி வாங்க ரொம்ப சுவையான இந்த வெண்டைக்காய் மசாலா வெங்காயம் தக்காளி இல்லாமல் எப்படி பண்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
No ratings yet

வெண்டைக்காய் மசாலா | Ladies Finger Masala Recipe In Tamil

வெண்டைக்காய் மசாலா பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லாருக்கும் பிடிக்கும். இப்படி சுவையான வெண்டைக்காய்  மசாலாவை செய்து சாதத்து கூட சேர்த்து வச்சு சாப்பிடும்போது அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும். மசாலாவோட டேஸ்ட் மட்டும் இல்லாம வெண்டைக்காய் ரொம்ப அற்புதமான இருக்கும். எல்லாரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க ரொம்ப சுவையான இந்த வெண்டைக்காய் மசாலா வெங்காயம் தக்காளி இல்லாமல் எப்படி பண்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Ladies Finger Masala
Yield: 4
Calories: 192kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • 2 ஸ்பூன் தனியா விதைகள்
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் வேர்க்கடலை
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1 ஸ்பூன் வெள்ளை எள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்காமல் தனியா விதைகள், கடலை பருப்பு, உளுந்து இவற்றை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  •  
     பிறகு அதில் வேர்க்கடலை, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதே கடாயில் காய்ந்த மிளகாய் வறுத்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவேண்டும்.
  • வறுத்து எடுத்து ஆற வைத்த பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து  , மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  • பின் வெண்டைக்காயை சுத்தம் செய்து நடுவில் கீறி விட வேண்டும். அடுத்து ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை எண்ணெயில் வதக்கி எடுக்க வேண்டும்
  • முக்கால் பதம் வதங்கிய பிறகு வெண்டைக்காயை அரைத்து வைத்துள்ள மசாலாக்களை கீறிய பகுதிக்குள் நன்றாக வைத்து மீண்டும் அதே எண்ணெயில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் நன்றாக வதக்கி எடுத்து சூடாக பரிமாறினால் சுவையான வெண்டைக்காய் மசாலா தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 192kcal | Carbohydrates: 18g | Protein: 39g