மணக்க மணக்க ருசியான வெண்டைக்காய் பொரியல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

- Advertisement -

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய சக்தி வெண்டைக்காய்க்கு உண்டு. வெண்டைக்காயில் இருக்கும் அபரிமிதமான சத்துக்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை அளிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் வெண்டைக்காயின் பிசுபிசுப்பு தன்மை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறார்கள்.

-விளம்பரம்-

வெண்டைக்காயில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக கிடைக்க ருசியான வெண்டைக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்கள். கண்டிப்பா திரும்ப திரும்ப செய்வீங்க. அவ்ளோ ருசியாக இருக்கும்.

- Advertisement -

வெண்டைக்காய் என்பது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் மிகவும் அத்யாவஸ்யமான ஒரு காய்கறி என்பதை நாம் சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அத்தகைய வெண்டைக்காயை ஒரு சில குழந்தைகள் உண்ண பிடிவாதம் பிடிப்பது உண்டு. அப்படி பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி உண்ணக்கூடிய அளவிற்கு செய்யக்கூடிய ஒரு அருமையான வெண்டைக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

Print
4.50 from 2 votes

வெண்டைக்காய் பொரியல் | Ladies Finger Stir Fry In Tamil

வெண்டைக்காய் என்பது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் மிகவும் அத்யாவஸ்யமானஒரு காய்கறி என்பதை நாம் சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அத்தகையவெண்டைக்காயை ஒரு சில குழந்தைகள் உண்ண பிடிவாதம் பிடிப்பது உண்டு. அப்படி பிடிவாதம்பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி உண்ணக்கூடிய அளவிற்கு செய்யக்கூடிய ஒரு அருமையானவெண்டைக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry
Cuisine: tamil nadu
Keyword: Ladies Finger Stir Fry
Yield: 4
Calories: 83kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • சின்ன வெங்காயம் சிறிதளவு
  • உப்பு தேவைக்கேற்ப
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • கடுகு தேவையானஅளவு.
  • உளுத்தம்பருப்பு தேவையானஅளவு.
  • 1 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1 1/2 டீஸ்பூன் மிளகு பொடி

செய்முறை

  • சின்ன வெங்காயத்தை உரித்து நறுக்கவும். வெண்டைக்காயைக் கழுவி ரொம்பத் தகடாக இல்லாமல், கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
  • கடுகு, எண்ணெயில்போட்டுத் உளுத்தம்பருப்பை தாளித்து சேர்த்து வெங்காயம், கறிவேப்பிலை வதக்கவும். வெண்டைக்காயைப் போட்டுப் பிரட்டி, மூடி வைத்து சிறு தீயில் வதக்கவும்.
  • வெண்டைக்காய் கொழ கொழ என்று இருந்தால் தயிரையும் ஊற்றிக் கிளறவும். காய் வதங்கியதும் மிளகு பொடி தூவி இறக்கவும்.
  • மழைக்காலத்தில் ரசம், மிளகு சாதம், பொரிச்ச குழம்பு போன்ற மிளகு சேர்ந்த பதார்த்தங்களுக்கு சூப்பர் ஜோடி இந்தப் பொரியல்.

Nutrition

Serving: 100g | Calories: 83kcal | Carbohydrates: 14.2g | Protein: 3.6g | Fiber: 3.6g