- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
அடிக்கிற வெயிலுக்கு பொதுவாக மதிய நேர சாப்பாட்டிற்கு ஈஸியாக என்ன செய்யலாம் என பெண்கள் அனைவரும் சிந்தித்து கொண்டிருப்போம். ஆனால் இனி சிந்திக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. ஏனென்றால் சாதத்திற்கு சுவையான அதேசமயம் சட்டுன்னு செய்யக்கூடிய தயிர் குழம்பு செய்யலாம். மதிய வேளையில் மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான குழம்பு செய்து சாப்பிட நினைத்தால் வெண்டைக்காய் தயிர் குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் திங்கட்கிழமைகளில் இந்த குழம்பு செய்து சாப்பிடுவது நல்லது.
ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் காரசாரமாக அசைவம் செய்து சாப்பிடுவோம் அல்லவா அதனால் தான். பொதுவாக பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் தயிர். தயிர் சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். உங்கள் வீட்டில் உள்ளோர் தயிர் பிரியர்களா? அவர்களுக்கு இந்த வெண்டைக்காய் தயிர் குழம்பு செய்து கொடுங்கள். இந்த வெண்டைக்காய் தயிர் குழம்பு சப்பாத்தி, சாதம், பூரி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இந்த ரெசிபியை ஒரு தடவை செய்து பாருங்கள் அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீர்கள் அந்த அளவுக்கு டேஸ்டாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு நேரம் குறைவாக இருக்கும் போது இந்த தயிர் குழம்பை சட்டுன்னு பத்து நிமிடங்களில் செய்து முடித்திடலாம். இந்த ரெசிபிக்கு அப்பளம் மட்டும் சைடு டிஷ் ஆக இருந்தாலே போதும் சுவை அற்புதமாக இருக்கும் வேற எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாது. இப்போது சுவையான வெண்டைக்காய் தயிர் குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : தயிர் உருளைக்கிழங்கு கிரேவி
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெண்டைக்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், இஞ்சி, வெங்காயம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இதில் வறுத்த வெண்டைக்காய், கொத்தமல்லி சேர்த்து வதக்கி தயிரில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் தயிர் குழம்பு தயார்.






