- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- LUNCH
எப்பவுமே வெண்டைக்காய்ல வெண்டைக்காய் கார குழம்பு வெண்டைக்காய் கூட்டு வெண்டைக்காய் பெப்பர் ப்ரை வெண்டைக்காய் புளி கூட்டு அப்படின்னு செஞ்சு ரொம்ப போர் அடிச்சிருச்சா ? அப்போ உங்க வீட்ல வெண்டைக்காய் இருந்தா ஒரு சூப்பரான வெண்டைக்காய் கிரிஸ்பி ஃப்ரை செஞ்சி சாப்பிட்டு பாருங்க. இத தயிர் சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி, காளான் பிரியாணி, லெமன் சாதம் வைத்து சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். உங்க குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் கூட இந்த கிரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை கொடுத்து விடலாம்.
ொகாரக்குழம்பு, சாம்பார் ரசம் சாதம் இதுக்கும் கூட இந்த வெண்டைக்காய் ப்ரை நல்ல காம்பினேஷன் ஆகவே இருக்கும். இவ்வளோ சூப்பரான வெண்டைக்காய் ஃப்ரை நல்லா மொறு மொறுன்னு உங்க வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க இத லஞ்சுக்கு மட்டும் இல்லாமல் ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆகவும் செஞ்சு சாப்பிடலாம். காபி கூட இந்த பிரை வச்சு சாப்பிடும் போதும் செம டேஸ்டாவே இருக்கும். இப்ப வாங்க இந்த கிரிஸ்பியான வழவழப்பு இல்லாத ஒரு சூப்பரான வெண்டைக்காய் ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு வெண்டைக்காய் கேரட் தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்கள்!
Ingredients
Method
முதலில் வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதனுடன் மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் உப்பு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு கடலை மாவு அரிசி மாவு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை தயார்.






