Advertisement
காலை உணவு

சுட சுட சோறுடன் சாப்பிட வெண்டைக்காய் தக்காளி பச்சடி இப்படி செய்து பாருங்க!!

Advertisement

நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று ஆகும். ஏனென்றால் உடலுக்கு தேவையான பல சத்துகளை இவை தான் வழங்குகின்றன. இவற்றில் தினம் ஒரு வகை காய்கறியை நாம் நமது உணவுகளில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.அந்த வகையில் வெண்டைக்காயை நம்முடைய அன்றாட உணவுவில் சேர்த்துக்கொள்வதால் நமக்கு ஏகப்பட்ட பயன்கள் கிடைக்கின்றன.

இதனையும் படியுங்கள் : மாங்காய் பச்சடி இனிமேல் இப்படி செய்து பாருங்க! தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் இதன் சுவையே தனி தான்!

Advertisement

தென்னிந்தியாவில் வெண்டைக்காய் கொண்டு பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். வெண்டைக்காய் குழம்பு, வெண்டைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் மோர் குழம்பு தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி, தோசைக்கு கூட தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த தக்காளி வெண்டைக்காய் பச்சடி.

வெண்டைக்காய் தக்காளி பச்சடி | Ladysfinger Tomato Pachadi

Print Recipe
நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று ஆகும். ஏனென்றால் உடலுக்கு தேவையான பல சத்துகளை இவை தான் வழங்குகின்றன. இவற்றில் தினம் ஒரு வகை காய்கறியை நாம் நமது உணவுகளில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. அந்த வகையில் வெண்டைக்காயை நம்முடைய அன்றாட உணவுவில் சேர்த்துக்கொள்வதால் நமக்கு ஏகப்பட்ட பயன்கள் கிடைக்கின்றன. தென்னிந்தியாவில் வெண்டைக்காய் கொண்டு பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். சூடான சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி, தோசைக்கு கூட தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த தக்காளி வெண்டைக்காய் பச்சடி.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, tamilnadu
Keyword Pachadi
Prep Time 15 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 188

Equipment

  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

Ingredients

  • 200 கிராம் வெண்டைக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • புளி எலுமிச்சை அளவு
  • 2 டீஸ்பூன் மமிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள் எண்ணெய்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையானஅளவு

Instructions

  • முதலில் வெண்டைக்காய், வெங்காயம், தக்காளியை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு மிக்ஸியில் தேங்காயை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் புளியை தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, மஞ்சள்தூள் கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்றாக வதங்கி வரும்பொழுது அத்துடன் வெட்டி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
  • வெண்டைக்காயின் வழு வழுப்பு போயி காய் நன்றாக வெந்து வதங்கி வந்ததும் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீர் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து தட்டு வைத்து மூடி கொதிக்க விடவும்.
  • எல்லாம் நன்கு கொதித்து கலந்து சேர்ந்து வரும்பொழுது அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து லேசாக சூடானதும் கொத்தமல்லி, கருவேப்பிலை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • சுவையான நெல்லை ஸ்பெஷல் வெண்டைக்காய் தக்காளி பச்சடி தயார். சாதத்துடன் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 188kcal | Carbohydrates: 3.6g | Protein: 1.5g | Fat: 0.2g | Sodium: 8mg | Potassium: 303mg | Fiber: 2g | Vitamin A: 375IU | Calcium: 81mg | Iron: 0.8mg
Advertisement
Prem Kumar

Recent Posts

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

3 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

6 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

7 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

10 மணி நேரங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

19 மணி நேரங்கள் ago