சுவையான எலுமிச்சை சாதம் செய்வது.

எலுமிச்சை சாதம்
- Advertisement -

எலுமிச்சை சாதம் அனைவர்க்கும் பிடித்தமான வெரைட்டி ரைஸ் ஆகும்.

அதுமட்டும் இல்லாமல் இந்த உணவை சுலபமாகவும் செய்து விடலாம். வீட்டில் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் வேளைக்கு செல்பவர்களுக்கும் மதிய உணவாக செய்து குடுக்கலாம்.அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

இந்த சாதம் அனைவர்க்கும் பிடிக்கும் என்பதால் வீட்டில் அடிக்கடி செய்வார்கள்.

எலுமிச்சை சாதம் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பதிவை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள்.

எலுமிச்சை சாதம்
Print
5 from 1 vote

எலுமிச்சை சாதம் ரெசிபி

எலுமிச்சை சாதம் அனைவர்க்கும் பிடித்தமான வெரைட்டி ரைஸ் ஆகும்.
அதுமட்டும் இல்லாமல் இந்த உணவை சுலபமாகவும் செய்து விடலாம். வீட்டில் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் வேளைக்கு செல்பவர்களுக்கும் மதிய உணவாக செய்து குடுக்கலாம்.அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த சாதம் அனைவர்க்கும் பிடிக்கும் என்பதால் வீட்டில் அடிக்கடி செய்வார்கள்.
எலுமிச்சை சாதம் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பதிவை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள்.
Prep Time5 mins
Active Time10 mins
Total Time15 mins
Course: எலுமிச்சை சாதம்
Cuisine: Indian, இந்தியன்
Keyword: lemon rice, எலுமிச்சை சாதம்
Yield: 2 people
Calories: 29kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

தாளிப்பதற்குத் தேவையான பொருட்கள்.

 • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
 • ½ டேபிள் ஸ்பூன் கடுகு
 • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
 • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
 • 10/15 கடலை,முந்திரி பருப்பு தேவைப்பட்டால்
 • 3 காஞ்சமிளகாய்
 • 3 பச்சை மிளகாய்
 • கருவேப்பிலை சிறிதளவு
 • ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
 • ¼ டேபிள் ஸ்பூன் பெருங்காயப் பொடி
 • 2 எலுமிச்சை பழம்
 • 2 கப் அரிசி
 • உப்பு தேவையான அளவு

செய்முறை

எலுமிச்சை சாதம் செய்யும் முறை.

 • முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும்.
 • பின்பு அதில் கொஞ்சம் கடலை மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
 • வறுத்த பிறகு அதில் பச்சை மிளகாய், காஞ்ச மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.
 • பின்பு அதில் மஞ்சள் தூள், பெருங்காயப்பொடி சேர்த்தவுடன் அடுப்பை நிறுத்தவும். சிறுது நேரம் ஆறவிடவும்.
 • ஆறிய பின்பு அதில் எலுமிச்சை பழச்சாறை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
 • பின்பு அதில் வேகவைத்த சாதத்தை சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
 • இப்பொழுது சுவையான எலுமிச்சை சாதம் தயார்….

Nutrition

Calcium: 2mg | Vitamin C: 88mg | Fiber: 11g | Potassium: 3mg | Calories: 29kcal | Carbohydrates: 3g | Iron: 3mg

LEAVE A REPLY

Recipe Rating
Please enter your comment!
Please enter your name here