- Prep
- 5 min
- Cook
- 5 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
கம்பு, திணை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் சாமை கொண்டு செய்யப்படும் இந்த கார புட்டு ரொம்பவே அசத்தலான சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது ஆகும். தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு இந்த சாமை கார புட்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.
புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக சாமை மாவில் செய்யும் சாமை புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும். குழந்தைகளுக்கு இந்தப் புட்டு மிகவும் பிடிக்கும். இனிப்பு புட்டு சாப்பிட சில பேர் வீட்டில் சிரமப்படுவார்கள். அதிகமாக சாப்பிட்டால் திகட்டும் என்பதால். ஆனால், சிரமமே இல்லாமல் இட்லி பானையில், சாமை காரப்புட்டை சுலபமாக வீட்டில் செய்திடலாம்.
சாமை மாவினை வேக வைத்து தாளிப்பு கொடுத்து செய்யக்கூடிய இந்த காரப் புட்டு குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இந்த ஆரோக்கியம் மிகுந்த சாமை கார புட்டு எப்படி செய்வது? என்பதை நாமும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
Ingredients
Method
சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பிறகு சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.
பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லி இலையைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இதனுடன் சுண்டல் மசாலா குழம்பு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.






