- Prep
- 5 min
- Cook
- 9 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Rasam
மழைகாலம், குளிர்காலம் என்று வந்து விட்டாலே வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருமல் சளி காய்ச்சல் பிரச்சனை தான். இதிலிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிது அல்ல. மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் சாப்பிடவில்லை என்றாலும் ஒரு வாரத்திற்கு மனுஷனை பாடாய்படுத்து விடும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கவும், வந்த பிரச்சனையை சரி செய்யவும் ஒரு கண்டதிப்பிலி ரசம் செய்முறை இதோ உங்களுக்காக.இதை சூப்பு போல கூட சூடாக குடிக்கலாம். அருமையாக இருக்கும்!!!
கண்டதிப்பிலிக்கு செரிமான சக்தியம் உண்டு. மூலிகைகளில் ஒன்றுவிதவிதமான ரச வகைகளில் கண்டதிப்பிலி ரசம் ரொம்பவே ஆரோக்கியம் மிக்கதாக இருந்து வருகிறது. சளி, இருமல் தொந்தரவை விரட்டியடிக்க கூடிய சக்தி இந்த ஒரு கண்டதிப்பிலி ரசத்திற்கு உண்டு. நெய் சேர்த்து தாளித்து இந்த அளவுகளில் நீங்கள் ஒரு முறை ரசம் வச்சு பாருங்க இருமலும், சளியும் எங்க போச்சுன்னு உங்களுக்கே தெரியாது. சுவையான கண்டதிப்பிலி ரசம் செய்முறையை பார்ப்போம் வாருங்கள்.
Ingredients
Method
புளியை 2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி, அதில் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பின்னர் பெருங்காயத்தூளையும் சேர்க்கவும்.
பின்னர் பொடித்துவைத்துள்ள ரசப்பொடியை போட்டு, கண்டதிப்பிலி இலைகளை கடுகுடன் வதக்கி ரசத்தில் சேர்க்கவும்.
உடனே, இறக்கிவைக்கவும்.சளி பிடித்தவர்களுக்கு ஏற்ற ரசம் இது






