- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- snacks
மஞ்சூரியன் உணவு வகை அப்படிங்கறது எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். மஞ்சூரியன்ல பன்னீர் மஞ்சூரியன், மஸ்ரூம் மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன்,பிஷ் மஞ்சூரியன், ப்ரான் மஞ்சூரியன் நிறைய வெரைட்டிஸ் கூட இருக்கு. இத்தனை நிறைய வெரைட்டிஸ் இருக்கு நாம இன்னைக்கு ரொம்பவே சுலபமா இப்போ செய்யப் போறது வித்தியாசமான மேகி மஞ்சூரியன். எப்படி வீட்டிலேயே மேகி மஞ்சூரியன சுலபமாக செய்து சாப்பிட போறோம் அப்படின்னு பார்க்க போறோம்.
இந்த மேகி மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்ப சுவையா இருக்கும். இந்த மேகி மஞ்சூரியனை சைனீஸ் ஸ்டைலில் எப்படி வீட்டிலேயே செய்வது அப்படிங்கறது தெரிஞ்சுக்க போறோம். மேகி அப்படின்னாலே குழந்தைகள் எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். இந்த சுவையான மேகியை வைத்து எப்போது நம்ம நூடுல்ஸ் மாதிரி செய்து தான் சாப்பிட்டிருக்கோம். ஆனால் இன்னைக்கு அந்த மேகியை வைத்து எப்படி சூப்பரான ஒரு மஞ்சூரியன் செய்து சாப்பிடலாம் அப்படின்னு தெரிஞ்சிருக்கோம்.
இந்த மேகி மஞ்சூரியன் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும் சும்மாவே மேகினா குழந்தைகளுக்கு பிடிக்கும் அதுலயும் மஞ்சூரியன் மாதிரி செஞ்சு கொடுக்கும்போது வேற லெவல்ல விரும்பி சாப்பிடுவாங்க. மஞ்சூரியன் எப்போதும் சாதத்துக்கு சைடிஷா மட்டும்தான் சாப்பிட்டு இருக்கோம். ஆனா இவைகள் எல்லாம் சிற்றுண்டி போலவும் சாப்பிடலாம். நமக்கு எப்படி சாப்பிட விருப்பம் இருக்கிறதோ அந்த மாதிரி மஞ்சூரியன சாப்பிடலாம். எப்படி சுலபமா சைனீஸ் ஸ்டைல மேகி மஞ்சூரியன் வீட்டிலேயே செய்யலாம் அப்படினு தெரிஞ்சிக்கலாம் வாங்க.
Ingredients
Method
முதலில் கேரட் முட்டை கோஸ் இவற்றைபொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் குடைமிளகாயில் பாதி துண்டுகளை மட்டும் சற்று பெரியவைகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொண்டு மீதியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மேகியை எடுத்து பொடி பொடியாக கைகளால் உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ளகாய்கறிகளில் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசறி ஒரு பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு கலந்து வைத்துள்ள காய்கறி கலவையில் 3 1/2 ஸ்பூன் சோள மாவு, உடைத்து வைத்துள்ள மேகி சேர்த்து அதில் சிறிதளவு மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள மேகி உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அனைத்து மேகி உருண்டைகளையும் எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் பெரி துண்டுகளாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பூண்டு நன்றாக வதங்கிய பிறகு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பிறகு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் சோளமாக சேர்த்து அதில் நீர் விட்டு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். வாணலியில் கலந்து வைத்துள்ள சோளமாவு சேர்த்துக் கொள்ளவும்.
சோளமாவு சேர்த்ததால் திக்காகி வரும் அப்படி திக்கான பிறகு அதில் பொரித்து எடுத்து வைத்துள்ள மேகி உருண்டைகளை போட்டு நன்றாக கலந்து விட்ட வேண்டும்.மேகி உருண்டைகள் நன்றாக கலந்த பிறகு ஒரு ப்ளேட்டில் எடுத்து அதன் மேல் வெள்ளை எள் தூவி பரிமாறினால் சைனீஸ் ஸ்டைல் மேகி மஞ்சூரியன் தயார்.






