- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
மக்கானா என்பது தாமரையின் விதைகள். இதை ஆங்கிலத்தில் fox nuts என்றும் அழைப்பார்கள். தாமரை விதை என்றும் அழைக்கப்படும் மக்கானா வெள்ளை நிறத்தில் இருக்கும். மக்கானா விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த விதைகள் அனைத்து சூப்பர் மார்கெட் கடைகளிலும் கிடைக்கும். இந்த மக்கானாவைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை செய்யலாம். அதில் மக்கானா பட்டாணி கிரேவி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். இது சப்பாத்தி, பூரி, புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இது பெரும்பாலும் வட இந்தியர்களால் சிற்றுண்டி நேரங்களில் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் கலோரி அளவு மிக மிக குறைவு. அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த மக்கானாவை எடுத்துக் கொள்வதன் மூலம் மிக வேகமாக எடையைக் குறைக்க முடியும். பன்னீர் பட்டர் மசாலா போலவே தாமரை விதை கறியும் ரொம்பவே சுவையாக இருக்கும். இதில் பொட்டாசியம் மற்றும் சோடியமும் உள்ளன. இதனால் ரத்த அழுத்தம் சீராகி ஆரோக்கியம் காக்க உதவுகிறது.
ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம் கொண்ட இந்த மக்கானா நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பெரும்பாலானவர்கள் இந்த தாமரை விதைகளை வைத்து வெறுமனே பொரி போல வறுத்து மசாலா சேர்த்து எடுத்துக் கொள்கிறார்கள். ஒரே மாதிரி எடுத்துக் கொள்வதால் அனைவருக்கும் இது சலித்துப் போகலாம். அதனால் அருமையான சுவையில் எப்படி தாமரை விதை பட்டாணி கிரேவி செய்து என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : தாமரை விதை கிரேவி இப்படி செய்து பாருங்க! இந்த கிரேவியின் ருசியே தனி தான்!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் மக்கானாவை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போக வதக்கவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இது கொதிக்க ஆரம்பித்ததும் மக்கானா மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
இந்த கிரேவி நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் பிரியாணி மசாலா, கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மக்கானா பட்டாணி கிரேவி தயார்.






