பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பிச்சதிலிருந்து இந்த சம்மந்தி அப்படினாவே ரொம்ப ரொம்ப ஃபேமஸா இருக்கு. சம்மந்தியில் நிறைய வகைகள் இருக்கு போல அதுல தேங்காய் சம்மந்தி மாங்காய் சம்மந்தி இந்த மாதிரி நிறையவே இருக்கு. அதுல நம்ம கேரளா ஸ்பெஷலான சம்மந்தி ரெசிப்பி பார்த்திருப்போம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம மாங்காய் சம்மந்தி பார்க்க போறோம். ரொம்ப சீக்கிரத்திலேயே மாங்காய் சீசன் ஆரம்பிக்க போது அதனால வீட்லயும் மாங்காய் நிறைய இருக்கும் அதுல உப்பு மிளகாய் தூள் போட்டு சாப்பிடுவதற்கு ருசியா இருந்தாலும் வீட்ல இருக்க கூடிய எல்லா மாங்காயிலயும் இதே மாதிரியே செஞ்சு சாப்பிடக்கூடாது.
கொஞ்சம் வித்தியாசம் வித்தியாசமா ஏதாவது செஞ்சு சாப்பிடணும் அந்த வகையில வெறும் நான்கு பொருட்கள் மட்டுமே வச்சு ஒரு சூப்பரான மாங்காய் சம்மந்தி ரெசிபி செஞ்சு பாருங்க. சுடச்சுட சாதத்துல போட்டு நெய் இல்லனா எண்ணெய் ஊத்தி சாப்பிடறதுக்கு அவ்ளோ ருசியா இருக்கும். இந்த சம்மந்தி ரெசிப்பில சாதம் போட்டு கிளறி லஞ்ச் பாக்ஸ்க்கு கூட எடுத்துட்டு போகலாம். இதுக்கு சுட்ட அப்பளம் இருந்தால் போதும் வேறு எதுவும் சைடு டிஷ்ஷா தேவைப்படாது. ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். வீட்ல சாப்பாடு குழம்பு பொரியல் அப்படின்னு செய்றதுக்கு சோம்பேறித்தனமா இருக்கும் போது நான்கு பொருட்கள் மட்டுமே வச்சு சூப்பரான இந்த மாங்காய் சம்மந்தி செஞ்சு பாருங்க.
டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும். சூப்பரான இந்த மாங்காய் சம்பந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்கக்கூடிய எல்லாருமே அடிமையாகிடுவாங்க முக்கியமா பெரியவங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நல்லா புளிப்பா காரமா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். வீட்ல கர்ப்பிணி பெண்கள் இருந்தா அவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுக்கலாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ஈஸியான சம்பந்தி ரெசிப்பி செய்வதற்கு நமக்கு அஞ்சு நிமிஷம் போதும். அஞ்சே நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த சம்மந்தி ரெசிப்பியை கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து அசத்துங்க.
ஒருவேளை எங்கேயாவது போகும்போது டைம் ஆகிவிட்டது என்றால் கவலையே படாதீங்க சாதம் வெச்சிட்டு இந்த சம்மந்தி ரெசிப்பி செஞ்சிருங்க டக்குனு வேலை முடிஞ்சிடும் நீங்களும் வெளியில் போகும் போது சாப்பிட்டு போன மாதிரி இருக்கும். இந்த சம்மந்தி ரெசிப்பி பொதுவா கேரளா இலங்கை இதுபோன்ற இடத்திலதான் ரொம்ப ரொம்ப ஃபேமஸ் ஆக இருக்கும் ஆனால் இப்போ தமிழ்நாட்டில் கூட ரொம்ப ரொம்ப பேமஸ் ஆயிடுச்சு. இத தேங்காய்த்துவையல் மாங்காய் துவையல் அப்படின்னு கூட தமிழ்நாட்டு ஸ்டைல்ல சொல்லலாம்.இப்ப வாங்க இந்த சுவையான மாங்காய் சம்பந்தி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மாங்காய் சம்மந்தி | Manga Chammanthi Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 மாங்காய்
- உப்பு தேவையான அளவு
- 3 பச்சை மிளகாய்
- 5 சின்ன வெங்காயம்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
செய்முறை
- மாங்காயை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான மாங்காய் சம்மந்தி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் மாங்காய் ஊறுகாய் இப்படி செய்து பாருங்கள்! இந்த வருடம் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய ரெசிபியாம்!