- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
உங்கள் வீட்டில் சப்பாத்தி மற்றும் பூரி அதிகம் செய்வீர்களா? அதற்கு எப்போதும் போல் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து போர் அடித்து விட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை மங்களூர் ஸ்டைலில் மாங்காய் கறி செய்யுங்கள். பொதுவாக மாங்காய் என்றால் யாருக்கு தான் பிடிக்காது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாங்காய் சாப்பிடுவதற்கு ஆசைப்படுவார்கள். மாங்காய் வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரெசிபியை செய்வார்கள்.
மாங்காய் மசியல், மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடி, மாங்காய் சாதம் என சொல்லிக்கொண்டே போகலாம். எது செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாம் சற்று வித்தியாசமாக மாங்காய் கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த கறி மிகவும் டேஸ்டியாக இருக்கும். முக்கியமாக இப்படி மாங்காய் சைடுடிஷ்ஷை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
அனைவருக்கும் பிடித்த மாங்காயைக் கொண்டு வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு மங்களூர் மாங்காய் கறி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். இந்த மாங்காய் கறி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த ருசியான மாங்காய் கறியை சில நிமிடங்களில் சுலபமாக செய்திடலாம். இந்த கறி சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான மங்களூர் மாங்காய் கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆலு பூரி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!!
Ingredients
Method
முதலில் மாங்காயை தோல் சீவி கைகளால் விழுது போல் நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் காய்ந்த மிளகாய், பச்சை சேர்த்து வதக்கவும்.
பின் நன்கு பிசைந்து வைத்துள்ள மாம்பழ விழுதை சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
அதன்பிறகு இந்த கலவை ஒரு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதன்பிறகு சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மங்களூர் ஸ்டைல் மாங்காய் கறி தயார்.






