Advertisement
சைவம்

சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான மாங்காய் கார குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

Advertisement

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். இது பெரும்பாலோனோர் பலவகையாக இந்த கார குழம்பு செய்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் மாங்கா குழம்பு என்பது ஒரு காரமான தென்னிந்திய கறி ஆகும், இது இனிப்பு மற்றும் காரமான புளி குழம்பில் சமைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : காரசாரமான கல்யாண வீட்டு கார குழம்பு இப்படி செய்து பாருங்க!

Advertisement

இதில் உள்ள வெந்தய விதைகள்‌ மற்றும் வெல்லம் சேர்க்கப்படுவது இந்த குழம்பு செய்முறையை சுவையில் தனித்துவமாக்குகிறது. வெந்தய விதைகள் மற்றும் கொத்தமல்லி விதைகளில் இருந்து வறுத்து பொடி செய்யப்படும் சுவைகள் இந்த சுவையான கறியின் உண்மையான சுவையை வெளிப்படுத்துகின்றன. இது சாதம் அல்லது கேரளா பரோட்டா முதலியவை கூட சேர்த்து சாப்பிடுவார்கள்.

மாங்காய் கார குழம்பு |Mango Kara Kulambu

Print Recipe
நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். இது பெரும்பாலோனோர் பலவகையாக இந்த கார குழம்பு செய்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் மாங்கா குழம்பு என்பது ஒரு காரமான தென்னிந்திய கறி ஆகும், இது இனிப்பு மற்றும் காரமான புளி குழம்பில் சமைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள வெந்தய விதைகள்‌
Advertisement
மற்றும் வெல்லம் சேர்க்கப்படுவது இந்த குழம்பு செய்முறையை சுவையில் தனித்துவமாக்குகிறது.
Course dinner, LUNCH
Cuisine Indian
Keyword kara kulambu
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 199

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 மாங்காய்
  • 3 டீஸ்பூன் வத்த குழம்பு பொடி
  • புளி நெல்லிக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன்
    Advertisement
    நல்லெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  • 1/2 டீஸ்பூன் வெல்லம்
  • கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  • முதலில் அதிகம் புளிப்பில்லாத மாங்காயை கொஞ்சம் பெரிய துண்டாக வெட்டி வைக்கவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், மஞ்சள்தூள், கருவேப்பிலை, 2 வரமிளகாய் தாளித்து அத்துடன் மாங்காயை போட்டு நன்றாக கிளறவும்.
  • மாங்காயின் நிறம் மாறி வந்ததும் அத்துடன் புளி கரைசல், மற்றும் தேவயான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.5 நிமிடம் மூடி வேக விடவும்.
  • மாங்காய் கொதித்து நன்றாக வெந்து மசிந்து வரும் சமயம் வத்தக்குழம்பு பொடி சேர்த்து, தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதித்து வத்தி 1/2 பங்கு வந்ததும் 1/2 ஸ்பூன் வெல்லம் சேர்த்து மீதி எண்ணெய் ஊற்றி அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
  • ரொம்ப ருசியான மாங்காய் கார குழம்பு தயார். சூடான சாத்தத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட மிகவும் அருமையான சுவையுடன் இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 199kcal | Carbohydrates: 25g | Protein: 1.5g | Fat: 0.6g | Potassium: 156mg | Fiber: 2.6g | Vitamin A: 765IU | Vitamin C: 27.7mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

32 நிமிடங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

3 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

8 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

10 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

11 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

11 மணி நேரங்கள் ago