சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான மாங்காய் கார குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!

- Advertisement -

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். இது பெரும்பாலோனோர் பலவகையாக இந்த கார குழம்பு செய்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் மாங்கா குழம்பு என்பது ஒரு காரமான தென்னிந்திய கறி ஆகும், இது இனிப்பு மற்றும் காரமான புளி குழம்பில் சமைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : காரசாரமான கல்யாண வீட்டு கார குழம்பு இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

இதில் உள்ள வெந்தய விதைகள்‌ மற்றும் வெல்லம் சேர்க்கப்படுவது இந்த குழம்பு செய்முறையை சுவையில் தனித்துவமாக்குகிறது. வெந்தய விதைகள் மற்றும் கொத்தமல்லி விதைகளில் இருந்து வறுத்து பொடி செய்யப்படும் சுவைகள் இந்த சுவையான கறியின் உண்மையான சுவையை வெளிப்படுத்துகின்றன. இது சாதம் அல்லது கேரளா பரோட்டா முதலியவை கூட சேர்த்து சாப்பிடுவார்கள்.

Print
3 from 1 vote

மாங்காய் கார குழம்பு |Mango Kara Kulambu

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று இந்த கார குழம்பு. இதை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு மிகவும் எளிதாக இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக இந்த குழம்பு செய்து அசத்தலாம். இது பெரும்பாலோனோர் பலவகையாக இந்த கார குழம்பு செய்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் மாங்கா குழம்பு என்பது ஒரு காரமான தென்னிந்திய கறி ஆகும், இது இனிப்பு மற்றும் காரமான புளி குழம்பில் சமைக்கப்பட்ட மாம்பழங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள வெந்தய விதைகள்‌ மற்றும் வெல்லம் சேர்க்கப்படுவது இந்த குழம்பு செய்முறையை சுவையில் தனித்துவமாக்குகிறது.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: kara kulambu
Yield: 4 People
Calories: 199kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 மாங்காய்
  • 3 டீஸ்பூன் வத்த குழம்பு பொடி
  • புளி நெல்லிக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  • 1/2 டீஸ்பூன் வெல்லம்
  • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • முதலில் அதிகம் புளிப்பில்லாத மாங்காயை கொஞ்சம் பெரிய துண்டாக வெட்டி வைக்கவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், மஞ்சள்தூள், கருவேப்பிலை, 2 வரமிளகாய் தாளித்து அத்துடன் மாங்காயை போட்டு நன்றாக கிளறவும்.
  • மாங்காயின் நிறம் மாறி வந்ததும் அத்துடன் புளி கரைசல், மற்றும் தேவயான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.5 நிமிடம் மூடி வேக விடவும்.
  • மாங்காய் கொதித்து நன்றாக வெந்து மசிந்து வரும் சமயம் வத்தக்குழம்பு பொடி சேர்த்து, தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதித்து வத்தி 1/2 பங்கு வந்ததும் 1/2 ஸ்பூன் வெல்லம் சேர்த்து மீதி எண்ணெய் ஊற்றி அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
  • ரொம்ப ருசியான மாங்காய் கார குழம்பு தயார். சூடான சாத்தத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட மிகவும் அருமையான சுவையுடன் இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 199kcal | Carbohydrates: 25g | Protein: 1.5g | Fat: 0.6g | Potassium: 156mg | Fiber: 2.6g | Vitamin A: 765IU | Vitamin C: 27.7mg