மதிய உணவுக்கு ருசியான மாங்காய் சாதம் இப்படி செய்து! அஹா இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

குழந்தைகளுக்கு மாங்காய் என்றாலே மிகவும் பிடிக்கும். அந்தவகையில் மாங்காய் சாதம் லன்ச் க்கு செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் எலாம் சாதத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். அதுமட்டும் அல்லாமல் இப்பொழுது மாங்காய் சீசன்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : மாங்காய் பச்சடி இனிமேல் இப்படி செய்து பாருங்க! தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

என்பதால் அடிக்கடி செய்து கொடுங்கள். இந்த சாதத்தை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

mango rice
Print
2 from 2 votes

மாங்காய் சாதம் | Mango Rice Recipe In Tamil

குழந்தைகளுக்கு மாங்காய் என்றாலே மிகவும் பிடிக்கும். அந்தவகையில் மாங்காய் சாதம் லன்ச் க்கு செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் எலாம் சாதத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். அதுமட்டும் அல்லாமல் இப்பொழுது மாங்காய் சீசன் என்பதால் அடிக்கடி செய்து கொடுங்கள்.இந்த சாதத்தை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time5 minutes
Active Time5 minutes
Total Time12 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: mango rice, மாங்காய் சாதம்
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 மாங்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 2 ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 4 வர மிளகாய் கிள்ளியது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • மஞ்சள் தூள் கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மாங்காயை தோல் நீக்கி கழுவி துருவிக்கொள்ளவும்.
  • அடுத்து சாதத்தை உதிரி பதத்தில் வடித்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும், கடலை பருப்பு, சீரகம், வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து துருவிய மாங்காய் சேர்த்து மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் வடித்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும் இப்பொழுது சுவையான மாங்காய் சாதம் தயார்.