- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இரவு உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் மரவள்ளிக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த மரவள்ளிக்கிழங்கைக் கொண்டு மரவள்ளிக்கிழங்கு மசாலா செய்யுங்கள். பொதுவாக மரவள்ளிக்கிழங்கு வைத்து கிரேவி, புட்டு, சிப்ஸ் அப்படின்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம். ஆனால் இன்னைக்கு நம்ம செய்ய போற இந்த மரவள்ளிக்கிழங்கு ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, போதும் அந்த ரெசிபிக்கு நீங்கள் அடிக்ட் ஆகிடுவீங்க.
அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான மரவள்ளிக்கிழங்கு மசாலா தான் பாக்க போறோம். இந்த மரவள்ளிக்கிழங்கு மசாலா சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது. அதோட இந்த சூப்பரான ரெசிபியை நெய் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சூப்பரான ரெசிபியை நீங்கள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்போது சுவையான மரவள்ளிக்கிழங்கு மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மரவள்ளிக்கிழங்கு தோசை இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
முதலில் மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
அதன்பிறகு இது ஒரு கொதி வந்ததும் வேக வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை சேர்த்து தண்ணீர் சுண்ட நன்கு வதக்கவும். பின் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மரவள்ளிக்கிழங்கு மசாலா தயார்.






