மார்ச் மாத ராசி பலன் 2024..!

- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்றமிகுந்த மாதமாக திகழப்போகிறது. உடல் நலனில் கவனம் தேவை. சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் அதை உடனே கவனத்தில் கொண்டு மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். விதியின் அருளால் பல வேலைகளைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வேகம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள். செலவுகள் அதிகரிப்பதால், பணம் சம்பந்தமாக சில மன அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். இந்த மாதம் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் உங்களுக்கு இருக்கும் உடல்நலக் கோளாறுகளை நீக்கி நிவாரணம் பெறுவீர்கள்.

-விளம்பரம்-

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்போடு அந்த வேலையை செய்து முடிப்பீர்கள். இந்த மாதம் திருமண வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும் ஆனால் உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் என்பது உறுதி. வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதம் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நினைத்ததெல்லாம் நடக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிக அளவு பணவரவு ஏற்படும். வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து எளிதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். நீண்ட பயணங்கள் மேற்கொள்ளலாம். உங்கள் வேலையில் மாற்றம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. தொழிலதிபர்களுக்கு மாதத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

இந்த மாதம் கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாகவும், நிதி விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இந்த மாதம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்காத சூழ்நிலையே உண்டாகும். வேலையில் ஈகோவைத் தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் மன உளைச்சல் அதிகரிக்கும். பயண சூழ்நிலை உருவாகலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். இந்த மாதம் உங்களுக்கு நன்மதிப்பைக் கொடுக்கும். சமய காரியங்களுக்கான புதிய யோசனைகள் உங்கள் மனதில் தோன்றும். குடும்ப வாழ்க்கையிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். பண விஷயத்தில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

-விளம்பரம்-

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தைரியம் மிகுந்த மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் செலவுகளை செய்யும் பொழுது கவனத்துடன் செய்ய வேண்டும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த மாதம் நீங்கள் உடல் ரீதியாக கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும், ஏனெனில் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். தேர்வில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுப விரயங்கள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவைவிட நல்ல லாபம் கிடைக்கும். குடும்பம் மற்றும் நண்பர்களிடையே நல்லிணக்கம் உண்டாகும். தொழிலை முன்னேற்றுவதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கல்வி மற்றும் தொழில் விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். இந்த மாதம் நீங்கள் வெளிநாடு செல்ல முயற்சித்தால், சில தடைகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எதிர்த்து போராடும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் தொழிலை முன்னேற்ற எடுத்த முயற்சிகளில் நல்ல மாற்றம் ஏற்படும். சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலை அல்லது ஏற்ற தாழ்வுகளுக்கு மத்தியில் முன்னேறுவீர்கள். இது காதல் உறவுகளுக்கு சாதகமான காலமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும், ஆனால் வாக்குவாதங்கள் கூடும்.

-விளம்பரம்-

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நெருக்கடிகள் குறையும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு நேரம் சவாலாக இருக்கலாம். இந்த மாதம் உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பின் உதவியுடன், அந்த சவால்களை எல்லாம் நீங்கள் சமாளிக்க முடியும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் திருப்திகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் முயற்சிகள் வெற்றியை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வணிகர்களுக்கும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். தொடக்கத்தில் சில சவால்கள் இருக்கும், மாதத்தின் முற்பாதியில் சமாளிக்கலாம். வேலை செய்பவர்கள் சில மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும் அதே வேளையில் வியாபாரம் செய்பவர்கள் வெற்றிகரமான காலத்தை பெறுவார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முன்கோபத்தை தவிர்த்துக் கொள்வது நன்மையை தரும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை. ஒரு முறைக்கு பலமுறை யோசித்து புதிதாக முயற்சிகளை செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதோடு, செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் மேலதிகாரிகளுடன் நீங்கள் நல்ல உறவைப் பெறுவீர்கள்.

.மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். முடிந்த அளவிற்கு புதிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கவும். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். மாணவர்கள் சவால்களை எதிர்கொண்டு முன்னேற முயற்சிக்க வேண்டும். வெளிநாடு செல்வதில் வெற்றி கிடைக்கும். உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் என்பதால், வியாபாரம் செய்பவர்கள் சவால்களை சந்திக்க வேண்டி வரும்.