மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு உத்யோக ரீதியில் அருமையான காலம் இது. ஆனால், குடும்பத்தில் அதிருப்தி நிலவும், குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்குவது நல்லது. வணிகத் துறையிலும் பெரும் முன்னேற்றம் உண்டு. சுப நிதி யோகம் இருக்கும் என்பதால் மாணவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி மிகவும் நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் தேடி வரும். எடுத்த காரியம் வெற்றி பெரும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். எந்த ஒரு செயலையும் தொய்வின்றி செய்வீர்கள். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. குடும்ப உறுப்பினர்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளால் பொறுப்பு அதிகமாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் பலன்கள் மற்றும் ஆதாயங்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் நல்ல இடத்தை அடைவார்கள். அவர்களின் நேரம் , வாழ்க்கை சூரியனை போலவே நல்ல பிரகாசமாக இருக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு திருப்தியான மனநிலை ஏற்படும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கடகம்
சூரிய பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டிற்கு செல்ல உள்ளதால், உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சூரியனின் அருட்பார்வையில் நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நம்பிக்கை தரும் வகையிலான நிகழ்ச்சிகள் நடைபெறும். மன அழுத்தத்தால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சோம்பல் நீங்கி, சுறுசுறுப்பு உண்டாகும். வாகனம் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் தேடி வரும்.
சிம்மம்
உங்களுடைய அதிபதி சூரிய பகவான் தான். நீங்கள் தொட்ட அனைத்து வேலைகளும் உங்களுக்கு சாதகமாக அமையும். தேக ஆரோக்கியத்திற்கு உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள். இந்த நேரம் பணியாளர்களுக்கு நல்லதாக இருக்கும். உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த மாற்றம் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். ஆடி மாதம் உங்களுக்கு நல்ல மாதமாக இருக்கும், சுப செலவுகள் ஏற்படும், மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
கன்னி
சூரியன் சஞ்சரிப்பது கன்னி ராசியினருக்கு நல்ல பலன்களைத் தரும். அலுவலகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகள் நன்மையைத் தரும் எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். பொறுப்புகளை குறைக்கும் வகையிலான நிலை ஏற்படும். சொத்து, வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த லாபம் பெருகும்.
துலாம்
வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும் காலம் இது. உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்கும் என்பதால் உழைப்பாளிகளுக்கான மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல வருமானம் பெருகும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். கடுமையான வேலை கைக்கூடும். புதிய வேலை தேடி வரும். அதிர்ஷ்டம் தேடி வரும். பணி இடத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் உங்களுடைய உடன்பிறப்பால் சில ஆதரவுகள் கிடைக்கும்.
விருச்சிகம்
சூரிய பகவானால் உடன் வேலை செய்யும் ஊழியர்களால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அவ்வப்போது நம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பணம் கடன் வாங்க வேண்டியிருக்கும், குடும்பத்தில் இணக்கமான சூழல் நிலவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும்; சிறப்பான சூழ்நிலைகள் வரும். திருமண வாழ்வில் காதல் கூடும். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் சிந்தித்து முடிவெடுக்கவும். தனுசு ராசிக்காரர்களுக்கு பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரத்தில் பல்வேறு விதமான திட்டங்களை தற்போது தள்ளி வைப்பது நல்லது. தேவையற்ற செலவுகளால் சிரமப்படக்கூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும், உறவினர்கள் உதவி செய்வார்கள். அலுவலக வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த சூரியன் சஞ்சரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் நல்ல பலன்களை தராது. பண வரவில் இந்த குறையும் இருக்காது. ஆனால் சேமிப்பை நீங்கள் அதிக படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளை பார்த்து மனம் நிம்மதியடையும்.
மீனம்
சூரியனின் இந்த சஞ்சாரத்தால் ஆதாயமடைவார்கள். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்; பதவி உயர்வுக்கான வாய்ப்பும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீடு மாற்றலாம் என்ற எண்ணங்கள் நிறைவேறும் வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொண்டு நடப்பது நல்லது.
இதனையும் படியுங்கள் : சூரியன் பெயர்ச்சியால் ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!