வாராந்திர ராசிபலன் 17 ஜூன் 2024 முதல் 23 ஜூன் 2024 வரை

- Advertisement -

மேஷம்

இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் உடல்நலம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வாரம் நீங்கள் எதாவது முடிவெடுத்தால் அதை உங்கள் வீட்டின் பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே எடுக்க வேண்டும். இந்த வாரம் பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். இந்த வாரம் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல பலன் கிடைக்கும். இந்த வாரம் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும்.

-விளம்பரம்-

ரிஷபம்

இந்த வாரம் ரிஷப ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். முதலீடு செய்வதற்கு இந்த நேரம் மிகச் சிறந்தது. பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் பொன் பொருள் சேர்க்கை வரும். மனதில் ஏதாவது குறை இருக்கும். இந்த வாரம் புதிய நபர்கள் அல்லது எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. உத்தியோகத்தில் புதிய பொறுப்பு, பதவி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும். தடைபட்டிருந்த வேலை நடந்தேறும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் நேர்மறையான மாற்றங்களை காணலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் நிலையை வலுப்படுத்தவும், செல்வத்தை அதிகரிக்கவும் இந்த நேரத்தில் பல அற்புதமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் எதிரிகள் கூட உங்கள் நண்பர்களாக மாறுவார்கள். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். இந்த வாரம் எந்த கடினமான சூழ்நிலையிலும் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் கடினமான உழைக்க வேண்டும். இந்த வாரம் நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் எங்காவது செல்ல அல்லது சுற்றுலா செல்ல திட்டமிடலாம். வீட்டின் மகிழ்ச்சியான சூழ்நிலை இந்த வாரம் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு நிறுவனத்தில் சேரும் வாய்ப்பும் கிடைக்கலாம். இந்த வாரம் நெருக்கடியான பிரச்சினைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும்.‌ இந்த வாரம் உங்கள் செல்வத்தை அதிகரிக்க சிறந்த வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழிலுக்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். இந்த வாரம் உடல்நிலை முன்னேற்றம் பெறும். செலவு கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் பணவரத்து நன்றாக இருக்கும். இந்த வாரம் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தனித்தன்மையுடன் செயலாற்றுவீர்கள்.

-விளம்பரம்-

கன்னி

இந்த வாரம் உங்களின் நல்ல ஆரோக்கியம் காரணமாக, உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள். இந்த வாரம் உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இந்த வாரம் உடல் அசதி நீங்கும். மனதில் இருந்த கவலைகள் அகலும். சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்துசேரும். திருமண வயதினருக்கு வரன் வரும். திட்டமிட்டு செயலாற்றுவதில் இருந்த தயக்க நிலை மாறும். பின்னடைவு ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பண பற்றாக்குறை ஏற்படலாம். கூட்டுத் தொழிலில் ஈடுபட இந்த வாரம் சிறந்த வாரமாக இருக்கும். இந்த வாரம் எந்த காரியத்தையும் கச்சிதமாக முடிக்கும் திறன் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். இந்த வாரம் தெய்வ சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் அனைத்தும் விலகும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். செயல்களில் முன்னேற்றம் தோன்றும். பொருளாதாரத் தடை விலகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் உணவு பழக்கங்களில் சற்று கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலத்தில் உங்கள் தொழிலில் சில இறக்கங்களை நீங்கள் சந்தித்திருந்தால், இந்த வாரம் அதிலிருந்து வெளி வருவீர்கள். இந்த வாரம் சுபநிகழ்வுகளில் இருந்த தடைகள் அகலும். பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மனநிறைவு உண்டாகும். உங்கள் செயல்களில் விருத்தி உண்டாகும். புதிய ஒப்பந்தம் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். இந்த வாரம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

-விளம்பரம்-

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த வாரம் உங்கள் கமிஷன், டிவிடெண்ட் அல்லது ராயல்டி மூலம் பெரிய லாபம் கிடைக்கும். இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும். அனைத்து விதமான நலங்களையும் பெறப் போகிறீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். இந்த வாரம் எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இந்த வாரம் மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் மன அழுத்தத்தை தரும் வாரமாக இருக்கும். நீண்ட நாட்களாக நெருங்கிய உறவினரை சந்திக்க திட்டமிட்டிருந்தால் இந்த வாரம் அது நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். இந்த வாரம் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இந்த வாரம் வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். இந்த வாரம் குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்கு வெற்றியாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக அமையும். இந்த வாரத்தில், குடும்ப உறுப்பினர்களிடம் எதையும் சொல்லும்போது, உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பேசவும். இந்த காலகட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அல்லது புதிய வேலையைத் தொடங்கினால், உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்பம் ஒன்று நிகழும். அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் பண விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் நற்பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். இந்த வாரம் செலவுகள் கூடும் அதனால் சற்று சிக்கனமாக இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். இந்த வாரம் கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.

இதனையும் படியுங்கள் : குருவால் அடுத்த ஜூன் மாத 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்