Advertisement
சட்னி

புதினா மல்லி சட்னி ஒரு தடவை இப்படி செய்து பாருங்க! பின் நீங்களே அடிக்கடி வீட்டில் செய்வீங்க!

Advertisement

ரெண்டே நிமிஷத்துல தேங்காய் சேர்க்காம, வெறும் ஒரு கைப்பிடி மல்லி புதினாவை மட்டும் வெச்சு நல்ல சூப்பரான புதினாமல்லி சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்புதினா மல்லி சட்னியை ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு விதமாக அரைக்கும் வழக்கம் இருக்கும். எல்லா சட்னியிலும் கண்டிப்பாக புதினா தழைகள் இருக்கும். ஆனால் எல்லா சட்னிக்கும் வித்தியாசமான சுவை இருக்கும். சுலபமான முறையில் வித்தியாசமான புதினா மல்லி சட்னி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்க வீட்ல புதினா மல்லி சட்னியை இப்படி அரைத்தால் வீட்டில் இருப்பவர்கள் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையான சட்னி ரெசிபி உங்களுக்காக.

நம் பாரம்பரியமாக செய்து வரும் உணவுகளில் மல்லி , புதினாவும் ஒன்று. ஆனாலும் நிறைய பேருக்கு இந்த புதினா மல்லி சட்னி என்பது அந்த அளவிற்கு விருப்பமான ஒன்றாக இருக்காது. இப்போது இதில் குறிப்பிட்ட உள்ள பொருட்களை வைத்து நீங்கள் புதினா மல்லி சட்னி அரைத்து பாருங்கள். இனி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த புதினா மல்லி சட்னி ஒரு விருப்பமான ரெசிபியாக மாறி விடும் அந்த அளவிற்கு இதன் சுவை நன்றாக இருக்கும்.  வாங்க இதை எப்படி செய்வது என்று பாப்போம்

Advertisement

புதினாமல்லி சட்னி | Mint Coriander Chutney Recipe In Tamil

Print Recipe
ரெண்டே நிமிஷத்துலதேங்காய் சேர்க்காம, வெறும் ஒரு கைப்பிடி மல்லி புதினாவை மட்டும் வெச்சு நல்ல சூப்பரானபுதினாமல்லி சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்புதினா மல்லி சட்னியை ஒவ்வொருவர்வீட்டிலும் ஒவ்வொரு விதமாக அரைக்கும் வழக்கம் இருக்கும். எல்லா சட்னியிலும் கண்டிப்பாகபுதினா தழைகள் இருக்கும். ஆனால் எல்லா சட்னிக்கும் வித்தியாசமான சுவை இருக்கும்.சுலபமான முறையில் வித்தியாசமான புதினா
Advertisement
மல்லி சட்னி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம்நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்க வீட்ல புதினா மல்லி சட்னியை இப்படி அரைத்தால்வீட்டில் இருப்பவர்கள் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையானசட்னி ரெசிபி உங்களுக்காக. நம் பாரம்பரியமாக செய்துவரும் உணவுகளில் மல்லி , புதினாவும் ஒன்று. ஆனாலும் நிறைய பேருக்கு இந்த புதினா மல்லிசட்னி என்பது அந்த அளவிற்கு விருப்பமான ஒன்றாக இருக்காது.
Course
Advertisement
Side Dish
Cuisine tamilnadu
Keyword Mint Coriander Chutney
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 74

Equipment

  • 1 மிக்ஸி

Ingredients

  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 கப் புதினா தேவைக்குஏற்ப
  • 1 கப் கொத்தமல்லி தேவைக்குஏற்ப
  • உப்பு தேவைக்குஏற்ப

வறுத்துஅரைக்க :

  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு
  • 1 தேக்கரண்டி காய்ந்தமிளகாய்
  • புளி கொஞ்சம்

தாளிக்க:

  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடுகு
  • கறிவேப்பிலை சிறுது

Instructions

  • வெங்காயம் தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புதினா கொத்தமல்லியினை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தபருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து கொண்டு தனியாக வைக்கவும்.
  • பிறகு அதே கடாயில் வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் கடைசியில் புதினா, கொத்தமல்லி சேர்த்து மேலும் ஒரு நிமிடங்கள் வதக்கவும். இதனை சிறிது நேரம் ஆற வைத்து கொள்ளவும்.
  • மிக்சியில் முதலில் வறுத்த பொருட்கள் சேர்த்து புளியினை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த கலவையுடன் வதக்கி வைத்துள்ள பொருட்கைள தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து .அதையும் நன்கு அரைத்து கொள்ளவும்.
  • தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை சட்னியில் கொட்டவும், சுவையான சட்னி ரெடி. இது தோசை இட்லிக்கு பொருத்தமாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 74kcal | Carbohydrates: 12.6g | Protein: 2.8g | Fat: 0.88g | Potassium: 165mg | Fiber: 1.65g | Calcium: 14.84mg | Iron: 0.68mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

1 மணி நேரம் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

2 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

2 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

4 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

6 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

7 மணி நேரங்கள் ago