- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
ஒரு சிலருக்கு சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், அப்பளம் அப்படின்னு சாப்பிட்டு ரொம்ப ரொம்ப போர் அடிச்சு போயிருக்கும். அந்த மாதிரி போர் அடிச்சு போயிருந்தா இந்த மாதிரி சூப்பரான துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இதுவரைக்கும் நீங்க எவ்வளவோ துவையல் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அவ்ளோ அருமையாக இருக்கும். புதினா நிறைய சேர்த்து செய்யப் போற இந்த புதினா துவையல் ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும்.
சுட சுட சாதத்தில் போட்டு எண்ணெய் இல்லனா நெய் ஊற்றி சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும் சைடு டிஷ் ஆக அப்பளம் பொறிச்சிக்கிட்டாலே போதும் பெருசா எதுவும் சேர்க்கத் தேவையில்லை. சுவையான இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க இட்லி தோசைக்கு கூட இந்த ரெசிபி அருமையாக இருக்கும். அருமையான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க. இந்த புதினா துவையலில் சேர்க்கப் போகிற பொருட்களை எல்லாம் கண்டிப்பாக நீங்க இதுவரைக்கும் சேர்த்து செஞ்சிருக்கவே மாட்டீங்க.
அந்த அளவுக்கு நம்ம இதுல பொருட்கள் சேர்த்து செய்யப் போறோம் அது எல்லாமே புதினா துவையலுக்கு கூடுதல் சுவை கொடுக்கும். இந்த சுவை கண்டிப்பா அருமையாகவே இருக்கும். எல்லாருக்கும் பிடித்த மாதிரியான இந்த புதினா துவையல் ரெசிபியை கண்டிப்பா எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து அசத்துங்க. இந்த கோடை காலத்தில் புதினாவை சேர்த்துகிறது ரொம்ப ரொம்ப அதனால கண்டிப்பா இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான புதினா துவையல் ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற புதினா கத்தரிக்காய் சாதம் ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கட்டி பெருங்காயம் சேர்த்து கொள்ளவும்.
உளுந்தம் பருப்பு, மல்லி விதைகள் காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.
புளியை ஊற வைத்து சேர்த்துக் கொள்ளவும். பிறகு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒரு கட்டு புதினா இலைகள் கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை உப்பு சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இப்பொழுது சுவையான புதினா துவையல் தயார்.






