- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இப்போ இது பச்சை மொச்சை பயறு சீசன் அதனால அதிகமாவே கிடைக்கும். அது மாதிரி வீட்ல அதிகமா கிடைக்கும்போது மொச்சை பயிறு வச்சு புளி குழம்பு செஞ்சு சாப்பிடுறது நிறைய பேருக்கு ரொம்ப பிடிக்கும். அது மட்டுமில்லாமல் அந்த மொச்சை பயறை அப்படியே அவிச்சு சாப்பிடுவாங்க. ஆனா இனிமேல் அப்படி செய்யாம ஒரு தடவை உங்க வீட்டுல நிறைய மொச்சை பயறு இருந்துச்சுன்னா அதை வச்சு இந்த மாதிரி ஒரு சிம்பிளான கூட்டு செஞ்சு பாருங்க. ரசம் சாதத்துக்கு சாம்பாருக்கு எல்லாத்துக்குமே இது கூட வச்சு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
இந்த ருசியான கூட்ட அப்படியே சுட சுட சாதத்துல போட்டு கூட பிசைஞ்சு சாப்பிடலாம் அது மட்டும் இல்லாம இட்லி தோசைக்கு கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். செம்ம டேஸ்ட்டா இருக்கும் மஞ்சள் சீரகம் அரைச்சு ஊத்தி தேங்காய் போட்டு அரைச்சு எல்லாத்தையும் அப்படியே விழுதா சேர்த்து குக்கர்ல மட்டும் மூணு விசில் விட்டா போதும். சூப்பரா மொச்சை பயிறு நல்லா வெந்து அந்த மசாலாவோட சேர்ந்து ஒரு சூப்பரான ரெசிபி தயாராகிவிடும். அதுக்கு ஒரு தாளிப்பு மட்டும் கொடுத்துட்டா செம டேஸ்டான ஒரு மொச்சை பயிறு கூட்டு தயாராகிவிடும்.
இந்த மொச்சை பயறு கூட்டு ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி இதை செய்வீங்க. உங்க வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே இது ரொம்ப பேவரட் ஆக மாறிவிடும். இந்த கூட்டுக்கு சீரகம் சின்ன வெங்காயம், சோம்பு எல்லாமே அரைச்சு சேர்க்கறதால சுவை ரொம்ப அருமையாக இருக்கும். சின்ன வெங்காயம் சேர்கிற எல்லா ரெசிபியுமே ரொம்ப சூப்பரா இருக்கும். அந்த வகையில இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். இதை செஞ்சு பார்க்காதவங்க ஒரு தடவை மட்டும் உங்க வீட்ல செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.
திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. இந்த மொச்சை பயறுல நிறைய புரோட்டின் சத்துக்கள் இருக்கிறதால சாப்பிடுறது ரொம்பவே உடம்புக்கு ஆரோக்கியமானது. மற்ற பயறு வகைகள் கூட எப்பவுமே கிடைக்கும் ஆனா இந்த பயறு மட்டும் இந்த சீசன்ல மட்டும்தான் கிடைக்கும் அதனால கிடைக்கும்போதே இதை வாங்கி யூஸ் பண்ணிக்கோங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான மொச்சை பயிறு கூட்டு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான மொச்சை கார குழம்பு செய்வது எப்படி ?
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் மொச்சை பயிறை சேர்த்து அனைத்து விழுதை சேர்த்து உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் சுவையான மொச்சை பயிறு கூட்டு தயார்.





