Advertisement
சைவம்

கிராமத்து ஸ்டைலில் மொச்சை பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் வீடே மணக்கும்!

Advertisement

நார்ச்சத்து நிறைந்த இந்த மொச்சை காயை வாரத்தில் ஒரு நாளாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மொச்சை பொரியலை விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த மசாலா சேர்த்து போட்டு மொச்சை பொரியல் செய்து கொடுத்தால், மொச்சை கண்டால் வெறுப்பவர்கள் கூட அதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவை இருக்கும்.

என்னதான் சிட்டியில் வாழும் மக்கள் விதவிதமான உணவுகளை உண்டாலும் முழுமையான உணவு என்பது சாப்பிட்ட பிறகு வயிறும், மனமும் முழு திருப்தி அடைவதே ஆகும். அவ்வாறான சுவைமிக்க உணவுகளை கிராமப்புறங்களில் மட்டுமே உண்ண முடியும். ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ், பிரட் ஜாம் என நகர்ப்புற உணவிற்கு பழகிவிட்டாலும் சில சமயங்களில் ஊரில் எங்கள் பாட்டி சமைத்தது, எங்கள் அத்தை சமைத்தது எவ்வளவு ருசியாக இருக்கும் தெரியுமா? என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். இவ்வாறான மனதில் நிற்கும் கிராமத்து சுவையில் செய்யக்கூடிய மொச்சை பொரியலை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Advertisement

மொச்சை பொரியல் | Mochai Poriyal Recipe In Tamil

Print Recipe
மக்கள் விதவிதமான உணவுகளை உண்டாலும் முழுமையானஉணவு என்பது சாப்பிட்ட பிறகு வயிறும், மனமும் முழு திருப்தி அடைவதே ஆகும். அவ்வாறானசுவைமிக்க உணவுகளை கிராமப்புறங்களில் மட்டுமே உண்ண முடியும்.
Advertisement
ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ்,பிரட் ஜாம் என நகர்ப்புற உணவிற்கு பழகிவிட்டாலும் சில சமயங்களில் ஊரில் எங்கள் பாட்டிசமைத்தது, எங்கள் அத்தை சமைத்தது எவ்வளவு ருசியாக இருக்கும் தெரியுமா? என்று பலர் கூறுவதைகேட்டிருப்போம். இவ்வாறான மனதில் நிற்கும் கிராமத்து சுவையில் செய்யக்கூடிய மொச்சைபொரியலை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Course Side Dish
Cuisine tamil nadu
Keyword Mochai Poriyal
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 649

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் மொச்சை
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 பற்கள் பூண்டு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
  • உப்பு தேவையானஅளவு

தாளிப்பதற்கு

  • 1 டீஸ்பூன் சீரகம்
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

Instructions

  • முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு தூவி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள் மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • பின் அதில் சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.
  • அடுத்து,அதில் வேக வைத்துள்ள மொச்சையை சேர்த்து மசாலாவானது மொச்சையில் ஒன்று சேர நன்கு பிரட்டி இறக்கினால், மொச்சை பொரியல் ரெடி!!!

Nutrition

Serving: 450g | Calories: 649kcal | Carbohydrates: 26g | Sodium: 345mg | Potassium: 367mg | Calcium: 34mg
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

27 seconds ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

1 மணி நேரம் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

3 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

4 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

6 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

7 மணி நேரங்கள் ago