Advertisement
சைவம்

ருசியான மும்பை மேகி இட்லி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட பக்காவான ரெசிபி!

Advertisement

மும்பை ஸ்ட்ரீட் புட்கள்ள ரொம்ப ஃபேமஸான ஒன்னு  மேகி இட்லி. இந்த மேகி இட்லி ரொம்ப சுவையா இருக்கும். ஸ்ட்ரீட் ஃபுட்ல ரொம்ப ஃபேமஸான ஸ்ட்ரீட் ஃபுட் இந்த மேகி இட்லியும் ஒன்று. மும்பையில் உள்ள கடைத்தெருகள்ள ரொம்ப பேமஸான உணவுகள்ல ஒன்றான இந்த மேகி இட்லிய நம்ம வீட்ல எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ள போறோம். இட்லியை தோசை கல்லுல ஊத்த போறோம்.

தோசை கல்லுல ஊத்துனா இது எப்படி இட்லி ஆகும் என்று கேட்கிறீர்களா ஆனால் இது இட்லி தான். எல்லாருக்கும் மேகி பிடிக்கும் சிலருக்கு இட்லி பிடிக்கும் இப்போ இட்லியையும் இந்த மேகியையும் மிக்ஸ் பண்ணி இட்லி மாதிரி பண்றப்போ அது எல்லாருக்குமே பிடிக்கும். இந்த சுவையான இட்லி மேகிய மும்பை தெருக்கடைகளில் கிடைக்கிற மாதிரி எப்படி சுவையா வீட்டுல செய்து சாப்பிடுவது அப்படின்னு பார்க்க இருக்கோம். பாம்பே கடைவீதிகளில் கிடைக்கக்கூடிய நிறைய உணவுகள்ல இந்த மேகி இட்லியும் ஒன்னு. இப்படி புதுசா ட்ரை பண்ணினா அது எல்லாருக்கும் புடிச்சி போகும்.

Advertisement

அப்படி இந்த மாதிரி நீங்க மேகில இட்லி செய்து கொடுத்தீங்கன்னா இதை காலை நேர உணவாகும் மாலை நேர சிற்றுண்டியாகவும் கூட எடுத்துக்கலாம். இந்த மேகி இட்லி குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். ஏன்னா அவங்களுக்கு மேகி அப்படிநாளே ரொம்ப பிடிக்கும் அதுல நம்ம மேகி இட்லி செய்து கொடுத்தா இன்னும் விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க இந்த மும்பை ஸ்ட்ரீட் ஃபுட்டான மேகி இட்லி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

மும்பை மேகி இட்லி | Mumbai Maggi Idly Recipe In Tamil

Print Recipe
மும்பை ஸ்ட்ரீட் புட்கள்ள ரொம்ப ஃபேமஸான ஒன்னு  மேகி இட்லி. இந்த மேகி இட்லி ரொம்ப சுவையா இருக்கும். தோசை கல்லுல ஊத்துனா இது எப்படி இட்லி ஆகும் என்று கேட்கிறீர்களா ஆனால் இது இட்லி தான். எல்லாருக்கும்மேகி பிடிக்கும் சிலருக்கு இட்லி பிடிக்கும் இப்போ இட்லியையும் இந்த மேகியையும் மிக்ஸ்பண்ணி இட்லி மாதிரி பண்றப்போ அது எல்லாருக்குமே பிடிக்கும். இந்த சுவையான இட்லி மேகியமும்பை தெருக்கடைகளில் கிடைக்கிற
Advertisement
மாதிரி எப்படி சுவையா வீட்டுல செய்து சாப்பிடுவதுஅப்படின்னு பார்க்க இருக்கோம். பாம்பே கடை வீதிகளில் கிடைக்கக்கூடிய நிறைய உணவுகள்ல இந்த மேகி இட்லியும் ஒன்னு. இப்படி புதுசா ட்ரை பண்ணினா அது எல்லாருக்கும் புடிச்சிபோகும்.
Course Breakfast, dinner
Cuisine mumbai
Keyword Mumbai Maggi Idly
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 38

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் இட்லிமாவு
  • 1 பாக்கெட் மேகி
  • 1 வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • 1 கைப்பிடி குடைமிளகாய்
  • 1 கைப்பிடி பீன்ஸ்
  • 1 கைப்பிடி கேரட்
  • 12 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நூடுல்ஸை மட்டும் உப்பு சேர்க்காமல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.பிறகு ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட் , பொடியாக நறுக்கிய குடைமிளகாய் பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு இதில் சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
     
  • பிறகு இந்த காய்கறிக்கு தேவையான உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். இறுதியாக இதில் மேகி பாக்கெட்டில் உள்ள மேகி மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • மசாலாவை கலந்து ஒரு இரண்டு மூன்று நிமிடம் கிளறி விட்ட பிறகு அதில் வேக வைத்து எடுத்துள்ள நூடுல்ஸ்சேர்த்து இந்த மசாலாக்கள் எல்லாம் அதில் படுமாறு நன்றாக கலந்து விட வேண்டும்.
  • இப்போது மேகி தயார் இந்த மேகியை தவாவில் மூன்றாகப் பிரித்து வைக்க வேண்டும். பிரித்து வைத்துள்ளமேகிகளின் மீது இட்லி மாவு எடுத்து ஒரு கரண்டி ஊற்றி வைக்க வேண்டும்.
  • ஒரு புறம் வெந்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டு வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறினால் சுவையான மும்பை தெருக்கடைகளில் கிடைப்பது போல சுவையில் மேக் இட்லி தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 38kcal | Carbohydrates: 4.5g | Protein: 18g | Fat: 0.1g | Fiber: 1.7g | Sugar: 2.2g | Vitamin A: 45IU | Vitamin C: 40mg | Calcium: 2mg

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு மொறுகலா கம்பு கார தோசை இப்படி செஞ்சி பாருங்கள்! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 மணி நேரம் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

9 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

19 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

22 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago