மதிய உணவுடன் சாப்பிட ருசியான முருங்கை கீரை வேர்க்கடலை பிரட்டல் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

வெந்தயக் கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை போலவே முருங்கைக் கீரையிலும் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. பலருக்கும் விருப்பமான முருங்கைக்காயில் வைட்டமின் C, இரும்புச்சத்து, நார்ச்சத்து கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய பல

By Prem Kumar · 2/1/2024

வெந்தயக் கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை போலவே முருங்கைக் கீரையிலும் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. பலருக்கும் விருப்பமான முருங்கைக்காயில் வைட்டமின் C, இரும்புச்சத்து, நார்ச்சத்து கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் முருங்கை மரத்தில் கொட்டிக் கிடக்கின்றன. கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது. அதோடு இந்த கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவது, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும்.

நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் காணப்படும் மரங்களில் ஒன்றாக முருங்கை மரம் உள்ளது. இது இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட வறட்சியைத் தாங்க கூடிய மரவகை ஆகும். இவற்றின் இலைகள் மற்றும் காய்கள் நம்முடைய அன்றாட உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. முருங்கை சாம்பாரில் சேர்க்கப்படுகிறது மற்றும் இலைகள் ரசம் மற்றும் பொரியல், கூட்டு தயாரிக்கவும் பயன்படுகிறது. வேறு எந்த பழங்கள் அல்லது காய்கறிகளிலும் இல்லாத அளவிற்கு ஊட்டச்சத்து நன்மைகள் முருங்கையில் இருப்பதாக பல அறிக்கைகள் கூறுகின்றன. உதாரணமாக, முருங்கை இலைகளில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக உள்ளது.

இதன் கால்சியம் செறிவு பாலை விட அதிகமாகும். மொத்த மரமே மருத்துவ குணம் வாய்ந்தது என்றால் அது முருங்கை, முருங்கை இலையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வேண்டும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த முருங்கை இலைகளை அடிக்கடி சாப்பிட முயற்சிக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாக முருங்கைக்கீரை கொண்டு பொரியல் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த கீரையைக் கொண்டு பிரட்டல் செய்யலாம் தெரியுமா? முருங்கைக்கீரை பொரியல், அவியல் போன்ற உணவுகளை கூட வெறுத்து ஒதுக்குபவர்கள் இந்த முருங்கை கீரை பிரட்டலை விரும்பி சாப்பிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க முருங்கைக்காய் கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Recipes AMP · Quick view
View full