Advertisement
ஸ்நாக்ஸ்

காளான் 65 ரொம்ப சுலபமாக இப்படி நீங்கள் வீட்டிலேயே செய்ய திரும்ப சாப்பிடணும்னு தோணும்!

Advertisement

பொதுவாக 65 ரெசிபி என்றால், சிக்கன் மற்றும் மட்டனில்தான் செய்து சாப்பிடுவோம், இப்போது நாம் காளானில் 65 ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம். உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அப்படியானால் ஒரு கப் காபி/டீ போட்டு கொடுத்து, அத்துடன் காளானைக் கொண்டு 65 செய்து கொடுங்கள். இந்த காளான் 65 மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். மேலும் இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டைப் பெறலாம்.

சாப்பாடு என்றாலே பிடிக்கும். விதவிதமான உணவுகளை சாப்பிட விரும்புவோம். சைவம், அசைவம் என இருவகைகளிலும் பலவித உணவுகள் உள்ளன. சிலர் சைவம் விரும்பி சாப்பிடுவர். சிலர் அசைவம் விரும்பி சாப்பிடுவர். இருந்தாலும், சிலர் ஐப்பசி மாதத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் கூட இந்த ஒருமாதம் சைவம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Advertisement

காளான், பன்னீர் வகைகளில் விதவிதமாக செய்து சாப்பிடலாம். அந்தவகையில் சிக்கன் 65 போல் காளான் 65 செய்து சாப்பிடலாம். ரொம்பவே சுவையான காளான் 65 கறி சுவையையும் மிஞ்சிவிடும் அளவிற்கு இருக்கப் போகிறது. சைவப் பிரியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் இந்த காளான் 65 செய்வதற்கு ரொம்பவே சுலபமானது. காளான் 65 எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

காளான் 65 | Mushroom 65 recipe in tamil

Print Recipe
பொதுவாக 65 ரெசிபி என்றால், சிக்கன் மற்றும் மட்டனில்தான் செய்து சாப்பிடுவோம், இப்போது நாம் காளானில் 65 ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம். உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அப்படியானால் ஒரு கப் காபி/டீ போட்டு
Advertisement
கொடுத்து, அத்துடன் காளானைக் கொண்டு 65 செய்து கொடுங்கள். இந்த காளான் 65 மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். மேலும் இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டைப் பெறலாம். சிக்கன் 65 போல் காளான் 65 செய்து சாப்பிடலாம். ரொம்பவே சுவையான காளான் 65 கறி சுவையையும் மிஞ்சிவிடும் அளவிற்கு இருக்கப் போகிறது. சைவப் பிரியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் இந்த காளான் 65 செய்வதற்கு ரொம்பவே சுலபமானது.
Advertisement
Course evening, Snack
Cuisine Indian
Keyword mushroom 65
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 5 People
Calories 15

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 கரண்டி

Ingredients

  • 400 கி காளான்
  • 1/4 கப் மைதா மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் சிகப்பு புட் கலர்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் காளானை நன்கு தண்ணீரில் சேர்த்து சுத்தமாக மண் இல்லாமல் கழுவி இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு இதில் நாம் வெட்டி வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் ஊற விடவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காளான் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான தீயில் மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான காளான் 65 தயார். வெங்காயம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 15kcal | Carbohydrates: 2.3g | Protein: 22.2g | Fat: 0.2g | Sodium: 6mg | Potassium: 448mg | Fiber: 0.7g | Vitamin C: 2.59mg | Calcium: 18mg | Iron: 0.91mg
Advertisement
Prem Kumar

Recent Posts

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

38 நிமிடங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

4 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

5 மணி நேரங்கள் ago

மாம்பழ மாதுளை மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக,மாதுளை சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

5 மணி நேரங்கள் ago

டிபன் பாக்ஸில் வைத்து கொடுத்து விட ஒரு குடைமிளகாய் சாதம் செய்து கொடுத்தால், அனைத்தும் காலியாகி விடும்!!!

பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு தினமும் சாம்பார் சாதம் ,லெமன் சாதம்,தயிர் சாதம் , புளியோதரை…

7 மணி நேரங்கள் ago

நெத்திலி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் குழம்பு வீட்டில் வச்சாலே பல வீட்டுக்கு அந்த வாசனை போகும். ஒரு சூப்பரான மீன் குழம்போட வாசனை பக்கத்தில்…

8 மணி நேரங்கள் ago