- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner, LUNCH
அசைவ வகையில் பல உணவுகள் இருந்தாலும் கூட நாம் முதலில் தேர்ந்தெடுப்பதென்னவோ இந்த முட்டையை தான். அதே போல் சாதத்திற்கு ஏதாவது ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது முட்டை தான். ஏனெனில் இதை செய்வது மிகவும் சுலபம். அப்படி நினைத்தவுடன் செய்யக் கூடிய ஒரு முட்டை மசாலாவை காளான் சேர்த்து இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். காளான் முட்டை மசாலாவை ஒரு முறை வித்தியாசமா இப்படி செஞ்சு பாருங்க. ரொம்ப அட்டகாசமா இருக்கும். .
காளான் முட்டை மசாலா ஒரு சுவையான மற்றும் மிகவும் சுலபமான குழம்பு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். காளான் முட்டை மசாலா சுவையுடன் கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு வகை. இந்த முட்டை மசாலா, காளான் தவிர உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம், அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.
முட்டை என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும். முட்டையில் உடம்பிற்கு தேவையான புரதச் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. அதிலும் குழந்தைகளுக்கு இதன் அவசியம் அதிகம் இருக்கிறது. எனவே முட்டை,காளான் வைத்து செய்து கொடுக்கும் எந்த வகையான உணவு வகைகளையும் அனைவரும் தாராளமாக சாப்பிடலாம். காளான் முட்டை மசாலா வீட்டிலேயே எளிமையாக செய்து விட முடியும். இதனை எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் சிறிது மஞ்சள் தூள், மிளகாய்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் நறுக்கிய காளனை சேர்த்து வதக்கி மசாலா சுண்டும் வரை வேகவிட்டு, பிறகு அதில் முட்டையை உடைத்துஊற்றி சிறிது உப்பு சேர்த்து, பிரட்டி, கடைசியாக மிளகுதூள் சேர்த்து நன்றாக பிரட்டிவிடவும்,
சுவையான காளான் முட்டை மசாலா தயார் .
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சப்பாத்தி, ப்ரட், தோசா ரோல், சமோசா ஸ்டஃப் ஆக வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.





