Home சைவம் ஆரோக்கியம் மிகுந்த காளான் சூப் செம்ம ருசியாக செய்ய வீட்டில் இருக்கும் இந்த பொருள் போதுமே!

ஆரோக்கியம் மிகுந்த காளான் சூப் செம்ம ருசியாக செய்ய வீட்டில் இருக்கும் இந்த பொருள் போதுமே!

பொதுவாக வெஜிடபிள் சூப்பை விட மஷ்ரூம் சூப் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். காளானை துண்டு துண்டாக வெட்டி சூப் போல இந்த சுடசுட குடித்தால் வருகின்ற இருமல், தும்மல் கூட நம்மை நெருங்காமல் ஓடி சென்று விடும். அந்த அளவிற்கு ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த க்ரீமியான காளான் சூப் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிதாக செய்யலாம்.

-விளம்பரம்-

குளிர்,மழை காலம் வந்துவிட்டாலே எதையும் சூடாக சாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும். காலையில் சமைத்த உணவு ஒரு மணி நேரத்திலேயே பிரிட்ஜில் வைத்த உணவு போன்று மாறிவிடும். எனவே உணவு வகைகளை சுடச்சுட சாப்பிட்டால் மட்டுமே மழை, குளிர்காலங்களில் உடம்பிற்க்கு இதமாக இருக்கும். அப்படி உணவு மட்டுமல்லாமல் உடம்பிற்க்கு கொஞ்சம் புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் காளான் சூப்செய்தும் குடிக்கலாம். இப்படி அடிக்கடி சூப் செய்து குடித்தால் உடம்பில் சளி தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.  வாருங்கள் இந்த சுவையான காளான் சூப்பை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
No ratings yet

காளான் சூப் | Mushroom Soup Recipe In Tamil

குளிர்,மழை காலம் வந்துவிட்டாலே எதையும் சூடாகசாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும். காலையில் சமைத்த உணவு ஒரு மணி நேரத்திலேயே பிரிட்ஜில்வைத்த உணவு போன்று மாறிவிடும். எனவே உணவு வகைகளை சுடச்சுட சாப்பிட்டால் மட்டுமே மழை,குளிர்காலங்களில் உடம்பிற்க்கு இதமாக இருக்கும். அப்படி உணவு மட்டுமல்லாமல் உடம்பிற்க்குகொஞ்சம் புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் காளான் சூப்செய்தும் குடிக்கலாம். இப்படிஅடிக்கடி சூப் செய்து குடித்தால் உடம்பில் சளி தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.  வாருங்கள் இந்த சுவையான காளான் சூப்பை எப்படி செய்வதுஎன்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Soup
Cuisine: tamil nadu
Keyword: Mushroom Soup
Yield: 4
Calories: 22kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ காளான்
  • 3 தக்காளி
  • 4 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 2 டீஸ்பூன் சர்க்கரை
  • வெண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டேபிள் ஸ்பூன் கான்பிளவர்
  • 1/4 லிட்டர் பால்

செய்முறை

  • முதலில் தக்காளியை அரைத்து கொள்ள வேண்டும். தண்ணீரில் காளானை வேக வைக்கவும்.
  • பின் காளான் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி, பேஸ்ட்டை ஊற்ற வேண்டும். கொதித்தவுடன் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை வெண்ணெய் சேர்க்கவும்,
  •  கான்பிளவர் மாவை சிறிது நீரில் கலக்கி சூப்பில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
     
  •  இறுதியாக பால் ஊற்றி இறக்கவும், சுவையான காளான் சூப் தயார், இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும்.

Nutrition

Serving: 200g | Calories: 22kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 5mg | Potassium: 318mg | Fiber: 1g | Sugar: 2g