Advertisement
அசைவம்

இப்படி கூட ருசியான மட்டன் பிரியாணி செய்யலாம்! குக்கரில் குழையாமல் இப்படி செய்யுங்கள்!

Advertisement

அசைவ பிரியர்களுக்கு யாருக்கு தான் பிரியாணி என்றால் பிடிக்காது. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். பெயரை கேட்டாலே எல்லோருடைய வாயில் எச்சில் ஊரும். அதுவும் மட்டன் பிரியாணி என்றால் அவளவுதான் விரும்பி சாப்பிடுவாங்க.

அந்த வகையில் நம் வீட்டிலே மட்டன் பிரியாணி குக்கரில் எப்படி செய்வதென்றுதான் இன்று பார்க்க போகிறோம்.

Advertisement

அதுவும் குக்கரில் குழையாமல் எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம். சுலபமாகவும், ஹோட்டல் சுவையில் வீட்டிலே செய்து விடலாம்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துக்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.

மட்டன் பிரியாணி | Mutton Biriyani Recipe In Tamil

Print Recipe
அசைவ பிரியர்களுக்கு யாருக்கு தான் பிரியாணி என்றால் பிடிக்காது. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். பெயரை கேட்டாலே எல்லோருடைய வாயில் எச்சில் ஊரும். அதுவும் மட்டன் பிரியாணி என்றால் அவளவுதான் விரும்பி சாப்பிடுவாங்க.
அந்த வகையில் நம் வீட்டிலே மட்டன் பிரியாணி குக்கரில் எப்படி செய்வதென்றுதான் இன்று பார்க்க போகிறோம்.
அதுவும் குக்கரில் குழையாமல் எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம். சுலபமாகவும், ஹோட்டல் சுவையில் வீட்டிலே செய்து விடலாம்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துக்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword mutton biriyani, மட்டன் பிரியாணி
Prep Time 15 minutes
Cook Time 25 minutes
Total Time 46 minutes
Servings 4 people

Equipment

  • 2 குக்கர்

Ingredients

தேவையான பொருட்கள்:

    வேக வைக்க தேவையான பொருட்கள்:

    • கப் பாசுமதி அரிசி
    • 500 கிராம் மட்டன்
    • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
    • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
    • 1 பட்டை
    • 2 ஏலக்காய்
    • 2 பிரிஞ்சி இலை
    • 5 கிராம்பு
    • 1 கருப்பு ஏலக்காய்
    • உப்பு தேவையான அளவு

    அரைக்க:

    • ¾ ஸ்பூன் மல்லி
    • 1 காஸ்மீரி மிளகாய்
    • 5 வரமிளகாய்
    • ½ டீஸ்பூன் சோம்பு
    • ½ டீஸ்பூன் சீரகம்
    • 10 மிளகு
    • 2 பிரிஞ்சி இலை
    • பட்டை
    • 5 ஏலக்காய்
    • 1 கருப்பு ஏலக்காய்
    • 10 கிராம்பு

    பிரியாணி செய்வதற்கு:

    • ½ கப் எண்ணெய்
    • 1 டீஸ்பூன் நெய்
    • 1 கப் மல்லி இலை
    • 1 கப் புதினா
    • 120 கிராம் வெங்காயம் நீளமாக நறுக்கியது
    • டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
    • 2 பச்சை மிளகாய் இரண்டாக நறுக்கியது
    • 3 தக்காளி நறுக்கியது
    • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
    • எலுமிச்சை சாறு அரை பலம்

    Instructions

    செய்முறை:

    • முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

    வேக வைப்பது:

    • முதலில் மட்டனை நன்கு கழுவி
      Advertisement
      சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து அத்துடன் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலக்காய், கிராம்பு, கருப்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை சிறிதளவு உப்பு சேர்த்து மட்டன் முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் பக்குவமாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.

    மசாலா அரைப்பது:

    • ஒரு மிக்சியில் மல்லி, காஸ்மீரி மிளகாய், வர மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கருப்பு ஏலக்காய், சேர்த்து நன்கு பொடித்து எடுத்துக்கொள்ளவும். {இந்த மசாலாவை எல்லா வகையான பிரியாணிக்கும் சேர்க்கலாம்}

    பிரியாணி செய்வது:

    • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் சேர்த்து காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வதக்கவும்.
    • வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நன்கு வதங்கி வரவேண்டும்.
    • வதங்கியதும் தக்காளி சேர்த்து கொழைய வதக்கவும். பிறகு கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து வதக்கவும். அடுத்து தயிர் சேர்த்து கொழைய வதங்கியதும் அரைத்து வைத்த பிரியாணி மசாலாவை சேர்த்து கலந்து மட்டனை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் அப்படியே வதக்கவும்.
    • பிறகு வதங்கியதும் 4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவேண்டும். அப்பொழுது மட்டனை வேக வைத்த தண்ணீரோடு சேர்த்து கணக்கில் வைத்து மீதி அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
    • நன்கு கலந்து விடவும். அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொதித்ததும் மீதான தீயில் அரிசியை சேர்த்து மூடி விட்டு 1 விசில் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவேண்டும்.
    • பிரஷர் போனதும் திறக்கவும். மெதுவாக கிளறி விடவும். இப்பொழுது சுவையான மட்டன் பிரியாணி தயார்.
    Advertisement
    swetha

    Recent Posts

    கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

    பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

    1 மணி நேரம் ago

    குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

    கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து…

    2 மணி நேரங்கள் ago

    சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

    ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

    3 மணி நேரங்கள் ago

    எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

    அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

    4 மணி நேரங்கள் ago

    அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

    ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

    6 மணி நேரங்கள் ago

    இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

    இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

    7 மணி நேரங்கள் ago