- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
எந்த சாதம் சாப்பிட்டாலும் கடைசியாக கொஞ்சமா ரசம் ஊத்தி சாப்பிட்டால் தான் அந்த சாதம் சாப்பிட்டதற்கான ஒரு நிறைவு கிடைக்கும். அந்த வகையில் பல வகையான ரசம் இருக்கிறது தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், பருப்பு ரசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில் இன்று நாம் மைசூர் ரசம் எப்படி செய்வதென்று பார்க்க இருக்கிறது. இந்த ரசம் ரொம்ப ரொம்ப அட்டகாசமான சுவையில் இருக்கும் சுட சுட சாதத்தில் இந்த ரசத்தை ஊத்தி பிசைந்து சாப்பிடும் போது அவ்வளோ டேஸ்ட்டாத இருக்கும். இதில் நாம் வேகவைத்த பருப்பு எல்லாம் சேர்த்து செய்வதால் ஒரு வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
பொதுவாக நிறைய பேருக்கு குழம்பு சாதம் சாப்பிடுவதைவிட ரசம் சாதம் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். சின்ன குழந்தைகளுக்கு ரசம் சாதம் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி ரச பிரியர்களுக்கு இந்த மாதிரி கொஞ்சம் சூப்பரான மைசூர் ரசம் செய்து கொடுத்து பாருங்கள். கண்டிப்பா இந்த ரசம் ரெசிபி ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவர்களுக்கு விருந்து வைக்கும் போது இந்த ரசம் ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான மைசூர் ஸ்டைல் ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் ரசம் செய்வது எப்படி
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் புளி தண்ணீர், மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வேகவைக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள மசாலா, வேகவைத்த பருப்பு, வெல்லம், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இது நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மைசூர் ரசம் தயார்.






