`மெட்ராஸ் ஐ’ பிரச்சினை தீர்க்கும் நந்தியாவட்டை பூ!

- Advertisement -

மிரட்டுது மெட்ராஸ் ஐ. ஆம்… சமீபகாலமாக எங்கே பார்த்தாலும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோயின் தாக்கத்தை அதிகமாகப் பார்க்க முடிகிறது. வழக்கமாக மெட்ராஸ் ஐ வரக்கூடிய நேரம் வேறு. ஆனால் இந்த தடவை மழை நேரத்தில் வந்து இப்படி பாடாய்ப்படுத்துகிறதே என்று பலர் சொல்லி வருந்துவதைக் கேட்க முடிகிறது. பொதுவாக பருவநிலை மாறும்போது கண் நோயை பரப்பக்கூடிய வைரஸ் உருமாறி இதுபோன்று கண் வலியை உண்டாக்கி மிகுந்த தொல்லை கொடுக்கும்.

-விளம்பரம்-


கண் பாதிப்பு அதிகம்


இப்போதெல்லாம் முன்புபோல் இல்லாமல் கண் நோய்களின் தாக்கம் சற்று வீரியமாகவே இருக்கிறது. இதனால் பலர் இது வேறு எதுவும் பாதிப்பாக இருக்குமோ? என்று அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வழக்கத்தைவிட கண்கள் ரத்தச்சிவப்பாக காட்சியளிக்கின்றன. கண்ணில் மண் விழுந்ததுபோன்று உறுத்தலும் அதிகமாக இருக்கிறது. இதற்காக என்னென்னவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் பலனளிக்கவில்லை என்று மக்கள் வருத்தப்படுகிறார்கள். இதற்கெல்லாம் நம் வீட்டிலேயே மருந்து இருப்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை. அவற்றைக்கொண்டே கண் நோய்களிலிருந்து விடுபடலாம்.

- Advertisement -


மஞ்சள் கிருமிநாசினி


பொதுவாக எல்லோர் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும் மஞ்சள்தூள் இருக்கும். அதை எடுத்து நீர் விட்டு நன்றாகக் கரைத்து எடுத்து அதில் மென்மையான பருத்தித்துணியை நனைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்தத் துணியை நிழலில் காயவைத்து எடுத்து கண்ணை துடைக்க வேண்டும். கர்ச்சிப் போன்று கையில் வைத்துக்கொண்டு கண்ணை துடைத்து வந்தால் கண் நோய் சரியாகிவிடும். மஞ்சள் கிருமிநாசினி என்பது நமக்கெல்லாம் தெரியும். அதனால் இதுபோன்று மஞ்சள் துணியை வைத்து கண்ணை துடைத்துவந்தாலே சரியாகிவிடும்.


நந்தியாவட்டை பூ


இதுமட்டுமல்லாமல் கண்ணை குளிரூட்டுவதற்கும் ஒரு மருந்து இருக்கிறது. நந்தியாவட்டை என்று ஒரு மூலிகை இருக்கிறது. அந்த நந்தியாவட்டை பூவை கண்ணின் மேல் வைத்துக் கட்டி வந்தாலே போதும், பிரச்சினை சரியாகிவிடும். முக்கியமாக இரவு தூங்கப்போகும் முன் ஒவ்வொரு கண்ணிலும் தலா இரண்டு நந்தியாவட்டை பூக்களை வைத்துக்கொண்டு தூங்கினால் போதும், கண்வலி சரியாகிவிடும். இதேபோன்று சோற்றுக்கற்றாழை ஜெல்லை துணியில் நனைத்து கண்ணுக்கு மேல் ஒத்தடம் கொடுத்து வந்தாலும் கண்வலி சரியாகிவிடும். நெல்லிக்காயை அரைத்து ஜூஸாக்கி அதனுடன் தேன் சேர்த்துக் குடித்தாலும் கண் வலிக் கோளாறு சரியாகிவிடும்.


டி.வி, செல்போன் தவிர்க்கவும்


இவை அனைத்தையும் செய்தால் மட்டுமே போதாது. டி.வி. செல்போன் பார்ப்பதை நிறுத்த வேண்டும். மெட்ராஸ் ஐ வந்த நாட்களில் கட்டாயம் அவற்றைல்லாம் தவிர்க்க வேண்டும். கண்களை குளிர்ந்த நீரைக்கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கண் நோய் வந்தவர்கள் கையால் தொட்ட பொருள்களை நாம் தொடாமல் இருப்பது நல்லது. அதேநேரத்தில் நோய் பாதித்த அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. மெட்ராஸ் ஐ என்பது குணப்படுத்த முடியாத நோய் ஒன்றும் கிடையாது. ஆனாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here