Advertisement
சைவம்

ருசியான நவரத்தின குருமா, சப்பாத்தி, பூரி, ஆப்பம், இடியாப்பம், தோசை, இதற்கெல்லாம் பக்காவான சைட் டிஷ் இது!

Advertisement

இட்லி தோசைக்கெல்லாம் சாம்பார் சட்னி எப்படி நல்ல சுவையான சைட் டிஷ்ஷோ அதே போலத் தான் இந்த நவரத்தின குருமாவும். சாதாரணமாக சட்னி சாம்பார் வைத்து சாப்பிடுவதை காட்டிலும் இந்த நவரத்தின குருமாவை ஊற்றி சாப்பிடும் பொழுது சப்பாத்தி, பூரி, இட்லியும் தோசையும் சுவை அதிகமாகவே இருக்கும். அதே நேரத்தில் கொஞ்சம் கூடுதலாகவும் சாப்பிடுவார்கள். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பதிவில் ஒரு சொட்டு கூட எண்ணெய் சேர்க்காமல் சுலபமாக நவரத்தின குருமாவை சீக்கிரத்தில் செய்து விடலாம்.

உங்க வீட்ல நீங்க மட்டன் வாங்கி இருக்க மாட்டீங்க. பல பயிறு வகைகளை  வைத்து தான் குருமா செய்வீங்க. ஆனா பக்கத்து வீட்டில இன்னைக்கு என்ன ஸ்பெஷல். உங்க வீட்ல மட்டனா? அப்படின்னு நிச்சயம் கேட்பாங்க. அந்த மட்டன் வாசம் இந்த நவரத்தின குருமாவில் வீசும். அப்படி ஒரு சூப்பர் நவரத்தின குருமா ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். வீட்டில் இருக்கும் சில மசாலா பொருட்களுடன் பல கடலை, பயிறு வகைகளை வைத்து அட்டகாசமான நாவிற்கு ருசியை தரும் நவரத்தின குருமா ரெசிபி உங்களுக்காக .

Advertisement

நவரத்தின குருமா | Navaratna Kurma Recipe In Tamil

Print Recipe
மட்டன் வாங்கி இருக்க மாட்டீங்க.பல பயிறு வகைகளை  வைத்து தான் குருமா செய்வீங்க.ஆனா பக்கத்து வீட்டில இன்னைக்கு என்ன ஸ்பெஷல். உங்க வீட்ல மட்டனா? அப்படின்னு நிச்சயம்கேட்பாங்க. அந்த மட்டன் வாசம் இந்த நவரத்தின குருமாவில் வீசும். அப்படி ஒரு சூப்பர்நவரத்தின குருமா ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க
Advertisement
போறோம். வீட்டில் இருக்கும்சில மசாலா பொருட்களுடன் பல கடலை, பயிறு வகைகளை வைத்து அட்டகாசமான நாவிற்கு ருசியை தரும்நவரத்தின குருமா ரெசிபி உங்களுக்காக .
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Naaratna Kurma
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 70

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 50 கிராம் பட்டாணி
  • 50 கிராம் கொண்டைகடலை
  • 50 கிராம்  சோயாபீன்ஸ்
  • 50 கிராம் பாசிப்பயிறு
  • 50 கிராம் மொச்சை
  • 50 கிராம் கறுப்பு கொண்டைகடலை
  • 50 கிராம் ராஜ்மா
  • 1 காரட்
  • 1 உருளைக்கிழங்கு
  • 10 பீன்ஸ்
  • 1 துண்டு இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 3  பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2  பச்சைமிளகாய்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகு                           
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  • 1/2 மூடி தேங்காய்
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 2 தேக்கரண்டி மல்லி தூள்
  • கறிவேப்பில்லை சிறிது
  • கொத்தமல்லி சிறிது
  • 1 குழிக்கரண்டி எண்ணெய்
  • உப்பு தேவைகேற்ப

Instructions

  • முதலில் தானிய வகைகளை 8 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும், இஞ்சி, பூண்டு, தேங்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றைஅரைத்துக் கொள்ளவும்.
     
  • பிறகு பின்ஸ், காரட், உருளைக்கிழங்கு,தக்காளி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.பிறகு ஒரு வானாலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
  • சிறிது சிவந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது, கரம்மசாலா, மிளகு தூள், மல்லி தூள், காய்கறிகள் ஆகியவற்றைப் போட்டு வதக்கி தானியங்களையும் அதில் போட்டு விடவும்.
  • உப்பு, தேங்காய் விழுது சேர்த்துநன்கு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு 15 நிமிடம் கொதிக்கவிடவும். இறக்கும் போது கறிவேப்பிலை,கொத்தமல்லி போட்டு இறக்கி பரிமாறவும்.

Nutrition

Serving: 400g | Calories: 70kcal | Carbohydrates: 0.2g | Protein: 6g | Fat: 2g | Sodium: 70mg | Potassium: 69mg | Calcium: 28mg | Iron: 4mg

இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு ஸ்டைல் ருசியான காரக்குழம்பு, அட்டகாசமான சுவையில் இப்படி ஒரு தரம் செஞ்சு பாருங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

7 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

18 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

20 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago