Advertisement
அசைவம்

புதிய வகையில் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

Advertisement

வார இறுதி நாட்கள் வந்தாலே அதனுடன் சோம்பேறித்தனம் வந்துவிடும். இன்று சமைக்காமல் இருக்கலாமா என்று யோசித்தாலும் வயிறு கேட்காது, வெளியே சாப்பிடுவதும் ஆரோக்கியம் இல்லை. எனவே இது போன்ற சமயத்தில் புதிதாககவும், எளிமையாகவும் அதே நேரம் அதீத சுவையில் இருக்கும் இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி உங்களுக்கு கைகொடுக்கும். இந்த வார கடைசி நாட்களில் இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

இதையும் படியுங்கள் : செட்டிநாடு பிரண்டை கார குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு தட்டு சோறும் கலியாகும். ஏன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு செட்டிநாடு ரெசிபியாக இருக்கும். அதனால் இன்று இந்த புதிய செட்டிநாடு சிக்கன் கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் எனா அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

செட்டிநாடு சிக்கன் கிரேவி | New Chettinad Chickan Gravy Recipe in Tamil

Print Recipe
வார இறுதி நாட்கள் வந்தாலே அதனுடன் சோம்பேறித்தனம் வந்துவிடும். இன்று சமைக்காமல் இருக்கலாமா என்று யோசித்தாலும் வயிறு கேட்காது, வெளியே சாப்பிடுவதும் ஆரோக்கியம் இல்லை. எனவே இது போன்ற சமயத்தில் புதிதாககவும், எளிமையாகவும் அதே நேரம் அதீத சுவையில் இருக்கும் இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி உங்களுக்கு கைகொடுக்கும். இந்த வார கடைசி நாட்களில் இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்
Advertisement
ஒரு தட்டு சோறும் கலியாகும். ஏன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு செட்டிநாடு ரெசிபியாக இருக்கும்.
Course Gravy, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword chettinad chicken Gravy, செட்டிநாடு சிக்கன் கிரேவி
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 5 people
Calories 225

Equipment

  • 1 குக்கர்

Ingredients

  • ½ கிலோ சிக்கன்
  • 2 தக்காளி நறுக்கியது
  • 3 பெரியவெங்காயம் நறுக்கியது
  • 4 பச்சைமிளகாய் இரண்டாக கீறி வைக்கவும்
  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ¼ கப் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 5 மிளகு பொடிசெய்தது
  • ¼ டேபிள் ஸ்பூன் சீரகம்
  • கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி

Instructions

  • முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு சிறு சிறு துடுகளாக வெட்டி கொள்ளவும்.
  • பிறகு மிக்சியில் தேங்காய் துருவலுடன், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • வதங்கியதும் அதனுடன் பொடி செய்த மிளகு, சீரகம் தூள், மற்றும் உப்பு சேர்த்து, கிரேவி போல் வரும் வரை நன்கு கிளறவும்.
  • பிறகு கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிட்டு, சிக்கனைப் போட்டு பிரட்டிவிடவும்.
  • அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வைத்திருக்கவும்.
  • பிறகு குக்கரை மூடி போட்டு 8 நிமிடகள் கழித்து திறந்து கிளறிவிட்டு இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார்.

Nutrition

Serving: 500gram | Calories: 225kcal | Protein: 63g | Cholesterol: 97mg | Sodium: 87mg | Potassium: 1050mg | Sugar: 12g
Advertisement
swetha

Recent Posts

வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்

கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சூப்பரான மலபார் முட்டை பிரியாணி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…

3 மணி நேரங்கள் ago

கமகம வாசத்துடன் ருசியான நாஞ்சில் மீன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

மீன் குழம்பு ருசிப்பவர்கள் நிச்சயம் அதிகம் இருப்பார்கள். இந்த நாஞ்சில் மீன் குழம்பு சாப்பிடுவதற்கு மசாலா கலந்து மிகவும் ருசியாக…

3 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

5 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியையின் சிறப்புகள்

சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திதியையே நாம் அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அட்சய என்ற சொல்லுக்கு குறையாத என்பது…

6 மணி நேரங்கள் ago

ஆரோக்கியம் நிறைந்த ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு சப்பாத்தி செய்தால் இரண்டு சப்பாத்தி அதிகமாவே சாப்பிடுவாங்க!

தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்.…

8 மணி நேரங்கள் ago