- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- KURUMA
இந்த காய் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. உடம்புக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் இதுவும் ஒன்று. அதுதாங்க நூல் கோல். ஆரோக்கியமாச்சே அப்படின்னு சொல்லி கடையில் பச்சை பசேல் என இந்த காய் விற்கும்போது வாங்கி விடுவோம். ஆனால் வீட்டிற்கு கொண்டுவந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன சமைப்பது என்று தெரியாது.நூல்கோல் குருமா இப்படி ஒருமுறை செய்து பாருங்களேன். அந்த நூல்கோல் வீணாகாமல் காலியாகி விடும். ருசியாக குருமா சாப்பிட்ட திருப்தியும் நமக்கு இருக்கும். ஆரோக்கியமாக சமைத்த திருப்பியும் நமக்கு இருக்கும்.
ரொம்ப ரொம்ப ஈசியா மணக்க மணக்க இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஒரு நூல்கோல் குருமா ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெஜிடேரியன் பாயா சுவையில் அசத்தலாக இருக்கக்கூடிய ரெசிபி இது. கஷ்டப்பட வேண்டாம். 15 லிருந்து 20 நிமிடத்தில் செய்து வைத்துவிடலாம். வாங்க அந்த சுலபமான நூல்கோல் குருமா எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.
Ingredients
Method
பாத்திரத்தில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கவும். வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
விட்டு பிறகு வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி பாதி வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
பிறகு தோல் நீக்கி நறுக்கிய நூல்கோலைச் சேர்த்து பிரட்டவும் அதனுடன் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, தேவையான அளவு நீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.
அரைக்க கொடுத்திருப்பவற்றை மிக்சியில் போட்டு தேவையான அளவு நீர் ஊற்றி அரைத்து வைக்கவும்.
நூல்கோல் வெந்ததும், அரைத்த்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி உப்பு சரிபார்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.






