- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் சாம்பார், சட்னி என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம் மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக வெங்காயம் மற்றும் கொத்தமல்லி வைத்து ஒரு வித்தியாசமான தொக்கு செய்து பாருங்கள். தமிழகத்தில் சப்பாத்திக்கு சைடிஷ் என்று கேட்டால் பலரும் சிறிது நேரம் கூட தாமதிக்காமல் தக்காளி தொக்கு என்று தான் சொல்வார்கள்.
ஏனென்றால் சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கின் காம்பினேஷன் அவ்வாறு. எப்போதும் ஒரே மாதிரி தக்காளி தொக்கு செய்யாமல் சற்று வித்தியாசமாக வெங்காயம் அதிகமாகச் சேர்த்து அதனுடன் கொத்தமல்லி சேர்த்து ஒரு சூப்பரான தொக்கு செய்யுங்கள். சப்பாத்திக்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் ஒரு அருமையான ரெசிபி தான் இந்த வெங்காய கொத்தமல்லி தொக்கு. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
முக்கியமாக இந்த வெங்காய கொத்தமல்லி தொக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை ட்ரை செய்யலாம். இந்த தொக்கை பக்குவமாக செய்தால் மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். வேலை விட்டு வந்து சமைக்க முடியாத நேரத்திலும் பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்திலும் இந்த தொக்கை வைத்து சாப்பிடலாம். வாருங்கள் இந்த பதிவில் சூப்பரான வெங்காய கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சின்ன வெங்காயம் கருவேப்பிலை துவையல்
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, வெந்தயம், மல்லி சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு புளி, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்த விழுது, அரைத்த கடுகு மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பின் சிறிதளவு வெல்லம் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான வெங்காய கொத்தமல்லி தொக்கு தயார்.






