Advertisement
சைவம்

எவ்வளவு சமைத்தாலும் ஒரே நாளில் காலி ஆகிவிடும்! இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!

Advertisement

பல்வேறு சட்னி, குருமா வகைகள் இட்லி, தோசைக்கு சப்பாத்திக்கு செய்து சாப்பிட்டாலும் இது போல வாய்க்கு ருசியாக வெங்காயம் பூண்டு தொக்கு. மற்ற தொக்கு செய்முறை போல வெங்காயத்தை வதக்காமல், ஆவியில் வேகவைத்து பின்னர் வதக்குவதுதான் இதன் தனித்துவம். ஒரு முறை செஞ்சு சாப்பிட்டு பாருங்க, எவ்வளவு இட்லி, சப்பாத்தி  வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க! தின்ன தின்ன திகட்டாத இந்த வெங்காயம் பூண்டு தொக்கு சுவையில் அலாதியானதாக இருக்கும். ரொம்பவும் சுலபமாக வீட்டிலேயே எப்படி சுவையான வெங்காயம் பூண்டு தொக்கு செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வெங்காயம் பூண்டு தொக்கு | Onion Garlic Thokku Recipe in Tamil

Print Recipe
பல்வேறு சட்னி,குருமா வகைகள் இட்லி, தோசைக்கு சப்பாத்திக்கு செய்து சாப்பிட்டாலும் இது போல வாய்க்குருசியாக வெங்காயம் பூண்டு தொக்கு. மற்ற தொக்கு செய்முறை போல வெங்காயத்தை வதக்கல், ஆவியில்வேகா வைத்து பின்னர் வதக்குவது தான் இதன் தனித்துவம். ஒரு முறை செஞ்சு சாப்பிட்டு பாருங்க,எவ்வளவு இட்லி, சப்பாத்தி  வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கிட்டேஇருப்பீங்க! தின்ன தின்ன திகட்டாத இந்த வெங்காயம் பூண்டு தொக்கு சுவையில் அலாதியானதாக இருக்கும். ரொம்பவும் சுலபமாக வீட்டிலேயே எப்படி சுவையான வெங்காயம் பூண்டு தொக்கு செய்யலாம்?என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
Course Side Dish
Cuisine srilankan
Keyword Onion Garlic Thokku
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 232

Equipment

  • 1 கடாய்
  • மிக்ஸி

Ingredients

  • 300 கிராம் சின்ன வெங்காயம் தோல் உரித்து
  • 2 பூண்டு முழு பூண்டு தோல் உரித்து
  • 3 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 புளி நெல்லிக்காய் அளவு
  • 4 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  • உப்பு தேவையான அளவு

வறுத்து அரைக்க

  • 2 டீஸ்பூன் தனியா
  • 6 வரமிளகாய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்

Instructions

  • முதலில், சின்ன வெங்காயம் ,பூண்டு  தோல் உரித்து ஒரு இட்லி பானை அல்லது ஒரு மூடி போட்ட கடாயில், ஆவியில் வேக வைக்க வேண்டும். 
    Advertisement
  • நான்கு நிமிடத்திலேயே இது நன்கு வெந்து விடும்.பின்னர் ஆறியவுடன் , மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்,
  • பின்னர்,ஒரு கடாயை அடுப்பில் சிறு தீயில் வைத்து, ரெண்டு ஸ்பூன் தனியா, ஆறு வரமிளகாய், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் வெந்தயம், சேர்க்கவும், ஒரு மூணு நாலு நிமிஷத்திலேயே கடுகு நல்லா பொரிஞ்சு வறுபட்டுவிடும்,அனைத்தையும்  சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும் , பின்னர், ஆறியதும் மிக்ஸி ஜார்ல சேர்த்து , மிளகாய் தூள் மூணு டீஸ்பூன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் அடுப்பில், ஒரு கடாயை வைத்து சூடானதும் நாலு டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் கொஞ்சம் கருவேப்பிலை சேர்க்கவும்.
  • கருவேப்பிலை பொரிஞ்சதும் அரைச்சு வச்ச வெங்காயம் பூண்டு கலவையை சேர்க்கவும், ரெண்டு நிமிஷம் நல்லா வதக்கவும்,கால் டீஸ்பூன் பெருங்காயம், 1/2 டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். வதங்கியதும், அரைத்த மசாலா பவுடர் சேர்த்து கலந்துவிடவும்.
  • பின்னர் அதில், புளி தண்ணீர் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு  கிளறி விடவும், எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி, இட்லி ,தோசை,சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Video

Nutrition

Serving: 1cup | Calories: 232kcal | Carbohydrates: 49g | Protein: 2g | Fat: 1.8g | Sodium: 328mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

16 நிமிடங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

18 நிமிடங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

2 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

3 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

3 மணி நேரங்கள் ago

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

7 மணி நேரங்கள் ago