- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Snack
இன்று நாம் மாலை நேரங்களில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் ஒரு ஸ்நாக்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆம் இன்று உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்து பார்க்க போகிறோம். நீங்கள் உங்களுக்கு குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலை நேரங்களில் டீ காபி கொடுக்கும் பொழுது இது போன்ற உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்து கொடுத்தால்
இதையும் படியுங்கள் : சுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி ?
அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரம் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சுட சுட கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு மொறு மொறு வென்று அசத்தலான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த சுவையான உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு நன்றாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். பின் துருவிய உருளைக்கிழங்கை ஒரு பவுளில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்கு அலசி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு பெரிய பவுளில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு இதனுடன் நீள் வாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கி கொத்தமல்லி மற்றும் நறுக்கிய கருவேப்பிலையை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.
பின் இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் ஓமம் போன்ற பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு இதனுடன் மைதா மாவு, சோள மாவு, கடலை மாவு மற்றும் கடைசியாக அரிசி மாவு போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்
பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும். ஒரு கைப்பிடி என அளவு வைத்து சிறிதளவு பக்கோடா சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.
இவ்வாறாக மீதம் இருக்கும் மாவையும் எண்ணெயில் சேர்த்து பக்கோடாவை பொன்னிறமாக வரும் வரை பொரித் எடுங்கள். அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு பக்கோடா இனிதே தயாராகிவிட்டது.






