Advertisement
சைவம்

மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் மாலை நேரங்களில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் ஒரு ஸ்நாக்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆம் இன்று உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்து பார்க்க போகிறோம். நீங்கள் உங்களுக்கு குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலை நேரங்களில் டீ காபி கொடுக்கும் பொழுது இது போன்ற உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்து கொடுத்தால்

இதையும் படியுங்கள் : சுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி ?

Advertisement
Advertisement

அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரம் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சுட சுட கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு மொறு மொறு வென்று அசத்தலான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த சுவையான உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா | Potato Onion Pakkoda Recipe in Tamil

Print Recipe
இன்று உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்து பார்க்க போகிறோம். நீங்கள் உங்களுக்கு குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலை நேரங்களில் டீ காபி கொடுக்கும் பொழுது இது போன்ற உருளைக்கிழங்கு வெங்காய பக்கோடா செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரம் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சுட சுட கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு மொறு மொறு வென்று அசத்தலான சுவையில் இருக்கும்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword Pakkoda, பக்கோடா
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 People
Calories 231

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 3 உருளைக்கிழங்கு துருவியது
  • 1 பெரிய வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 1 கைப்பிடி கருவேப்பிலை நறுக்கியது
  • 1 கைப்பிடி கொத்த மல்லி நறுக்கியது
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp சீரகத்தூள்
  • 1 tbsp சாட் மசாலா
  • 1 tbsp உப்பு
  • ¼ tbsp பெருங்காய தூள்
  • ¼ tbsp ஓமம்
  • ¼ கப் மைதா மாவு
  • 2 tbsp சோள மாவு
  • 1 tbsp கடலை மாவு
  • 1 tbsp அரிசி மாவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

Instructions

  • முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு நன்றாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள். பின் துருவிய உருளைக்கிழங்கை ஒரு பவுளில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை
    Advertisement
    நன்கு அலசி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு பெரிய பவுளில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு இதனுடன் நீள் வாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கி கொத்தமல்லி மற்றும் நறுக்கிய கருவேப்பிலையை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.
  • பின் இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் ஓமம் போன்ற பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு இதனுடன் மைதா மாவு, சோள மாவு, கடலை மாவு மற்றும் கடைசியாக அரிசி மாவு போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்
  • பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும். ஒரு கைப்பிடி என அளவு வைத்து சிறிதளவு பக்கோடா சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.
  • இவ்வாறாக மீதம் இருக்கும் மாவையும் எண்ணெயில் சேர்த்து பக்கோடாவை பொன்னிறமாக வரும் வரை பொரித் எடுங்கள். அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு பக்கோடா இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 200gram | Calories: 231kcal | Carbohydrates: 35g | Protein: 11g | Fat: 3g | Saturated Fat: 1.3g | Cholesterol: 4mg | Sodium: 4mg | Potassium: 365mg | Fiber: 3g | Sugar: 2g
Advertisement
Prem Kumar

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

6 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

16 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

19 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago