- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Dessert
சாப்பிடவே பிடிக்காதவர்களுக்கு கூட ஸ்வீட்ஸ் நான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுவும் வீட்ல செய்யற ஸ்வீட்ஸ் சொல்லவே தேவையில்லை உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். அதுலயும் பாயாசம் கேசரி போன்ற ரெசிப்பிஸ் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.
பாயசத்திலேயே நிறைய பாயாசம் இருந்தாலும் பால் பாயாசம் தான் ரொம்பவே பேமஸ் எவ்வளவு பாயாசம் வந்தாலும் பால் பாயசத்தை அடிச்சுக்கவே முடியாது அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். கல்யாண வீடுகள்ல எவ்வளவு நம்ம சாப்பிட்டாலும் கடைசியா இந்த பால் பாயாசம் குடிச்சு முடிச்சா தான் அந்த சாப்பாடு முழுமை அடையும்.
அந்த அளவுக்கு ஒரு சூப்பரான பால் பாயாசம் கல்யாண வீடுகளில் செய்ற மாதிரி எப்படி செய்றதுன்னு இப்ப நம்ம பார்க்கலாம். நிறைய தாய்மார்களுக்கு ஹோட்டல் ஸ்டைல்ல பால் பாயாசம் செய்ய வரமாட்டேங்குது பீலிங்கா இருக்கும். அவர்கள் எல்லாம் ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய ஒரு கல்யாண வீட்டு பால் பாயாசம் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Ingredients
Method
ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.பிறகு அதே கடாயில் சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்
பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்த உடன் ஜவ்வரிசியை போட்டு வேக ஜவ்வரிசி வெந்தவுடன் வறுத்து வைத்துள்ள சேமியாவை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
ஜவ்வரிசி சேமியா வேக வைத்த தண்ணீர் அதிகமாக இருந்தால் தண்ணீரை வடித்து விட்டு அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை கரைந்து சிறு கொதி வந்தவுடன் அதில் காய்ச்சி ஆற வைத்த பாலைசேர்த்து அடுப்பை ஆஃப் செய்து விடவும்.
பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையை பாயசத்தில் சேர்த்தால் சுவையான பால் பாயாசம் தயார்
ஒரு மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவை அருமையாக இருக்கும். வீட்டில் ஏதாவது சிறிய விசேஷங்கள் வந்தால் இந்த பால் பாயாசத்தை செய்து மகிழுங்கள்.






