- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Side Dish
பச்சை மிளகாய் புளித்தொக்கு செஞ்சா எப்படி இருக்கும்னு யோசிக்காதீங்க பச்சை மிளகாய் ரொம்ப காரமா இருக்கும்னு சிலர் இதை செய்யாமல் விட்டுவிடுவீர்கள். ஆனால் ஒரு தடவை இந்த பச்சை மிளகாய் வச்சு செஞ்சு பாருங்க காரமே தெரியாது நல்லா புளிப்பா காரசாரமா இனிப்பா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுக்கு நம்ம நீளவாக்குல இருக்கிற பச்சை மிளகாய் தான் பயன்படுத்த வேண்டும் குண்டு மிளகாய் பயன்படுத்தக் கூடாது. பச்சை மிளகாயை நன்றாக வதக்கி எடுத்துட்டா காரமே தெரியாது. ரொம்ப சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் வீட்டுல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க.
இட்லி, தோசை, சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே சூப்பரா இருக்கும். சுட சுட சாதத்திலையும் போட்டு பிசைந்து சாப்பிடலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் ஒரு தடவ வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. தயிர் சாதத்துக்கு இதை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா அட்டகாசமா இருக்கும். அவ்ளோ ருசியான ரெசிபியை எல்லாருமே சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் கொஞ்சம் பார்த்து கொடுங்க மத்தபடி எல்லாருமே சாப்பிடலாம். இதை ஃபிரிட்ஜுக்குள்ள ஸ்டோர் பண்ணி வச்சா 15 நாளைக்கு அப்படியே இருக்கும்.
நிறைய எண்ணெய் சேர்த்து இதை செய்யும் போது கெட்டே போகாது. சூடு பண்ணி சூடு பண்ணி கூட நாலு அஞ்சு நாளைக்கு வச்சு சாப்பிடலாம். நல்லெண்ணெய் ஊற்றி செய்தால் தான் இந்த ரெசிபி ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரு சிலர் பச்சை மிளகாயை வதக்கி அப்படியே சாப்பிடுவாங்க பழைய சாதத்துக்கு அது ரொம்பவே அற்புதமாக இருக்கும். அந்த மாதிரி பச்சை மிளகாய் புடிச்சவங்க இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான பச்சை மிளகாய் புளித்தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இனி செட்டிநாடு பச்சை மிளகாய் சட்னி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாயை அப்படியே சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் உளுந்தம் பருப்பு புளி பெருங்காயம் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு, வெல்லம் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து அரைத்து வைத்ததை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
15 நிமிடம் நன்றாக கொதித்ததும் இறக்கினால் சுவையான பச்சை மிளகாய் புளித்தொக்கு தயார்.






